ஹமாஸ் உடனான போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து வெளியான விமர்சனம் தான் கூகுள், மெட்டா நிறுவனங்கள் விலகக் காரணமாக அமைந்துள்ளது.
தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றான வெப் சம்மிட் மாநாட்டில் இருந்து மெட்டா (Meta) மற்றும் கூகுள் (Google) நிறுவனங்கள் வெளியேறியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் உடனான போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து வெளியான விமர்சனம் தான் இவ்விரு நிறுவனங்களும் விலகக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு மெட்டா நிறுவனம் வெப் சம்மிட் நிகழ்வில் பங்கேற்காது என்பதை அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார். "நாங்கள் வெப் சம்மிட் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டோம்" என்று கூகுள் செய்தித் தொடர்பாளரும் கூறியிருக்கிறார்.
வெப் சம்மிட் மாநாட்டின் இணை நிறுவனரும், ஐரிஷ் தொழிலதிபருமான பாடி காஸ்கிரேவ், கடந்த வாரம் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் எழுதிய பதிவு ஒன்றில், பல மேற்கத்திய தலைவர்கள் மற்றும் அரசுகளின் பேச்சும் செயலும் தன்னை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ககன்யான் பரிசோதனை வெற்றி! விண்ணில் சீறிப் பாய்ந்தது மாதிரி விண்கலம்! இஸ்ரோ அறிவிப்பு
"போர்க்குற்றங்கள் நேச நாடுகளால் செய்யப்பட்டாலும் அவை போர்க்குற்றங்கள் தான். வேறு எப்படிச் சொல்வது" என்று அக்டோபர் 13 அன்று காஸ்கிரேவ் ட்விட்டரில் எழுதியுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்தக் கருத்தை காஸ்கிரேவ் முன்வைத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஹமாஸ் கடந்த அக்டோபர் 7 அன்று காசா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து குறைந்தது 1,400 பேரைக் கொன்றனர், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான பகுதியை ராணுவம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முன் நடந்த மோதலில் சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
காசா பகுதி முழுவதும் இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சுகளில் 3,700 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசாவில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் சொல்கிறது.
நவம்பர் 13-16 தேதிகளில் லிஸ்பனில் நடக்கும் இந்த உச்சிமாநாட்டில் சுமார் 2,300 ஸ்டார்ட்அப் நிறுவனகங்கள் உள்பட 70,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.
நீல கலர் ஆதார் அட்டை தெரியுமா? இந்த கார்டு யாருக்கு வழங்கப்படும்? விண்ணப்பிப்பது எப்படி?