மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கல சோதனை ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற இருந்த ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைக்கப்படுவதாகவும் மீண்டும் சோதனை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
எஞ்சின் செயல்பாடு திட்டமிட்டபடி நடக்காததால் சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. 5 வினாடிக்கு முன் தானாகவே கவுன்ட்டவுன் நின்றுபோனது எனவும் தகவல் எதனால் இவ்வாறு நடந்தது என்பதை ஆய்வு செய்து விரைவில் தெரிவிப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.
undefined
ககன்யான் திட்ட பரிசோதனை தாமதம்: தெளிவற்ற வானிலை காரணமாக அரைமணி நேரம் ஒத்திவைப்பு
TV D1 Test Flight
Liftoff attempt couldn't be completed.
Updates will follow.
மூன்று நாட்களுக்கு முன்பு சோதனை நடைபெறும் நேரம் காலை 7 மணியில் இருந்து 8 மணியாக மாற்றப்பட்டது. இன்று மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு முன் தெளிவற்ற வானிலை காரணமாக மேலும் அரைமணிநேரம் தள்ளிப்போனது. தொழில்நுட்பக் கோளாறு ஏதும் இல்லை என்றும் வானிலை காரணமாகவே தாமதம் ஆகிறது என்றும் கூறப்பட்டது.
8.30 மணி ஆன பின்பும் விண்கலத்தை விண்ணில் ஏவமுடியாத நிலை நீடித்ததால் கவுன்ட்டவுன் நிறுத்திவைக்கப்பட்டது. பின் 8.45 மணி அளவில் மீண்டும் 5 நிமிட கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டது. இந்த முறை விண்ணில் பாய்வதற்கு 5 வினாடிகள் முன்பு கவுன்ட்டவுன் தானாகவே நின்றுவிட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியாக ககன்யான் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுப்பாதைக்கு ககன்யான் விண்கலம் செலுத்தப்பட உள்ளது. இதில் 3 வீரர்களை ஏற்றி விண்ணுக்கு அனுப்பி, அவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பும் வகையில் ககன்யான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டத்தின் முக்கிய பரிசோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று ஆளில்லா மாதிரி விண்கலம் ஒன்றை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஹமாஸ் பிடியில் பணயக் கைதிகளாக இருந்த 2 அமெரிக்கப் பெண்கள் விடுவிப்பு