
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பரிசோதனைக்காக சற்று தாமதமாக நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்குப் பதிலாக, 8.30 மணிக்கு டிவி-டி1 ராக்கெட் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பரிசோதனைக்கான ஏற்பாடுகளில் தொழில்நுட்ப பிரச்சினை ஏதும் இல்லை என்றும் வானிலை தெளிவாக இல்லாத காரணத்தால் அரைமணி நேரம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியாக ககன்யான் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுப்பாதைக்கு ககன்யான் விண்கலம் செலுத்தப்பட உள்ளது. இதில் 3 வீரர்களை ஏற்றி விண்ணுக்கு அனுப்பி, அவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பும் வகையில் ககன்யான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வரலாறு படைக்க போகும் இஸ்ரோ! இன்று காலை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!
2025ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டத்தின் முக்கிய பரிசோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று ஆளில்லா மாதிரி விண்கலம் ஒன்றை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோதனை அபார்ட் மிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த சோதனைக்காக உருவாக்கப்பட்ட டிவி-டி1 (TV-D1) ராக்கெட் மூலம் மாதிரி விண்கலம் அனுப்பப்பட உள்ளது. க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் ஆகிய பேலோடுகள் இதில் இருக்கும்.
இந்த சோதனையில் மாதிரி விண்கலத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் அமர்வதற்கான க்ரூ மாட்யூல் 17 கிமீ உயரத்திற்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விண்கலத்தில் உள்ள வீரர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.