
மாருதி சுசுகி நிறுவனம் கம்ப்ரெஸ்டு நேச்சுரல் கியாஸ் எனப்படும் CNG வாகனங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. சமீபத்தில் S-CNG கிட் கொண்ட புது மாடல்களை மாருதி சுசுகி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிசையர் S-CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
மற்ற CNG மாடல்களை போன்று இல்லாமல் புதிய டிசையர் மாடலின் மிட்-ஸ்பெக் VXI மற்றும் டாப் எண்ட் ZXI வேரியண்ட்களில் S-CNG கிட் வழழங்கப்படுகிறது. புதிய மாருதி சுசுகி டிசையர் S-CNG விலை முறையே ரூ. 8.14 லட்சம் மற்றும் ரூ. 8.82 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முதல் முறையாக வாடகை கார் மட்டுமின்றி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் S-CNG கிட் வசதியை டிசையர் மாடலில் மாருதி சுசுகி வழங்கி இறுக்கிறது. முன்னதாக இந்த வசதி டூர் எஸ் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய மாருதி சுசுகி S-CNG மாடலில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 88.5 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் செயல்திறன் 76 பி.ஹெச்.பி. மற்றும் 98.5 நியூட்டன் மீட்டர் என குறைகிறது. S-CNG கொண்ட டிசையர் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய டிசையர் S-CNG மாடல் லிட்டருக்கு 31.12 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய S-CNG மாடலில் ஸ்டாண்டர்டு டிசையர் மாடலில் உள்ள அதே அம்சங்களை வழங்கப்பட்டுள்ளன. புதிய மாருதி சுசுகி டிசையர் S-CNG மாடல் மாதாந்திர சந்தா திட்டத்திலும் கிடைக்கிறது. இதற்கான கட்டணம் மாதம் ரூ. 16,999 என துவங்குகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.