மஹிந்திரா ஸ்கார்பியோ N: எதிர்பார்ப்புகளை எகிறச் செய்யும் புது டீசர்கள் வெளியீடு...!

By Kevin Kaarki  |  First Published Jun 15, 2022, 4:45 PM IST

தற்போதைய ஸ்கார்பியோ மாடல் ஸ்கார்பியோ கிளாசிக் பெயரில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அறிவித்து உள்ளது.


மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி.-யாக இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் ஜூன் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புது கார் விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், காரின் இண்டீரியரை காண்பிக்கும் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் பிளாக் மற்றும் பிரவுன் நிறம் கொண்டிருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் டாப் எண்ட் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. தற்போதைய ஸ்கார்பியோ மாடல் ஸ்கார்பியோ கிளாசிக் பெயரில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அறிவித்து உள்ளது.

Tap to resize

Latest Videos

இண்டீரியர் அப்டேட்:

புதிய ஸ்கார்பியோ N மாடலில் XUV700 மாடலில் உள்ளதை போன்ற ஸ்டீரிங் வீல் மற்றும் பட்டன் லே-அவுட் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த காருக்கான ஆடியோ கண்ட்ரோல்களை இடது  புற பட்டனும், குரூயிஸ் கண்ட்ரோல் ஆப்ஷனை வலது புற பட்டன்கள் மூலமாகவும் இயக்க முடியும். 

இத்துடன் அடிரனோக்ஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதன் இண்டர்பேஸ் மஹிந்திரா XUV700 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. ஸ்கிரீன் அளவுகளும் மஹிந்திரா XUV700-இல் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். இந்த காரில் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள், சோனி சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் அனலாக் கடிகாரங்கள் உள்ளன. இந்த காரின் பேஸ் வேரியண்ட்களில் பிளாக் அண்ட் வைட் MID வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகிறது. இவை காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

இருக்கை அமைப்பு:

ஸ்கார்பியோ கிளாசிக் மாடலில் கடைசி இருக்கைகள் பக்கவாட்டுகளில் பார்த்த படி பொருத்தப்பட்டு இருக்கும் நிலையில், மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலில் முன்புறம் பார்த்தப்படி கடைசி அடுக்கு இருக்கைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த சீட்கள் 60:40 வகையில் மடிக்கும் வசதியுடன் வருகிறது. 

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இருவித என்ஜின்களுடன் AT மற்றும் MT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ டீசல் மாடலில் 4WD வசதி வழங்கப்படலாம். 

click me!