அனைத்து தகவல்களையும் வாட்ஸ்அப்-இல் அனுப்பியதும், பணம் சம்பந்தப்பட்ட பயனரின் அக்கவுண்டிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய பயனர்களை குறிவைத்து வாட்ஸ்அப் ஊழல் நடைபெற்று வருகிறது. இந்த தகவல் இந்தியா டெக் டுடே மூலம் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. இந்தியா டெக் டுடேவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கே.பி.சி. ஜியோ லக்கி டிரா பெயரில் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கும் போட்டி குறித்த தகவல் வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த குறுந்தகவலுடன் சலுகையில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று விளக்கும் வீடியோவும் இணைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பயனர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டும். அனைத்து தகவல்களையும் வாட்ஸ்அப்-இல் அனுப்பியதும், பணம் சம்பந்தப்பட்ட பயனரின் அக்கவுண்டிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது போன்று வரும் குறுந்தகவல்கள் எதற்கும் பயனர்கள் பதில் அனுப்ப வேண்டாம் என சைபர் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
undefined
வாட்ஸ்அப் செயலியில் வரும் போலி குறுந்தகவலுடன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம், சோனி லிவ் லோகோ உள்ளிட்டவை இணைக்கப்பட்டு இருக்கிறது. பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான கே.பி.சி. சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார். இதில் உள்ள தகவல்கள் இந்தி மர்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்டு இருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
இது போன்ற சமயங்களில் ஹேக்கர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தகவல்களை வழங்கச் சொல்லி கேட்பார். இவ்வாறு வரும் எந்த தகவலும் நம்பி, தனிப்பட்ட தகவல்கள் எதையும் வாட்ஸ்அப்பில் பகிர வேண்டாம் என சைபர் பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் இது போன்ற தகவல்கள் குறித்து அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கவும் செய்யலாம் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது போன்று ஏமாற்றும் நோக்கில் வரும் குறுந்தகவல் மற்றும் வரைபடங்களில் எழுத்துப் பிழை மற்றும் தவறான தகவல்கள் உள்ளிட்டவைகளை கண்டுபிடிக்க முடியும். இவற்றின் மூலமாகவே அவை போலியான தகவல் என்பதை உறுதிப்படுத்தி விடலாம்.