Kia Carens price: கார் மாடல்களின் விலை உயர்வு பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கரென்ஸ் எம்.பி.வி. மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. எனினும், இதுபற்றி கியா மோட்டார்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கியா வலைதளத்தின் படி புதிய கரென்ஸ் மாடல் விலை அனைத்து வேரியண்ட்களிலும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
முன்னதாக கியா கரென்ஸ் எம்.பி.வி. மாடலின் பிரீமியம் 7 பேஸ் வேரியண்ட் விலை ரூ. 8 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கியது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 9 லட்சத்து 59 ஆயிரம் என மாற்றப்பட்டு இருக்கிறது. இது முந்தையை விலையை விட ரூ. 60 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதே போன்று கியா கரென்ஸ் லக்சரி பிளஸ் வேரியண்ட் விலை தற்போது ரூ. 16 லடசத்து 59 ஆயிரம் என மாறி இருக்கிறது. இது அறிமுக விலையை விட ரூ. 40 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய விலை விவரங்கள்
கியா கரென்ஸ் பிரீமியம் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 9 லட்சத்து 59 ஆயிரம் (ரூ. 60 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் பிரீமியம் 1.4 லிட்டர் T-GDi மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 11 லட்சத்து 19 ஆயிரம் (ரூ. 20 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் பிரீமியம் 1.5 லிட்டர் டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் (ரூ. 40 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் பிரெஸ்டிஜ் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 10 லட்சத்து 69 ஆயிரம் (ரூ. 70 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் பிரெஸ்டிஜ் 1.4 லிட்டர் T-GDi மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 12 லட்சத்து 39 ஆயிரம் (ரூ. 40 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் பிரெஸ்டிஜ் 1.5 லிட்டர் டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 12 லட்சத்து 59 ஆயிரம் (ரூ. 60 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் பிரெஸ்டிஜ் பிளஸ் 1.4 T-GDi மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 13 லட்சத்து 89 ஆயிரம் (ரூ. 40 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் பிரெஸ்டிஜ் பிளஸ் 1.4 T-GDi 7DCT ரூ. 14 லட்சத்து 79 ஆயிரம் (ரூ. 20 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் பிரெஸ்டிஜ் பிளஸ் 1.5 டீசல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ரூ. 14 லட்சத்து 09 ஆயிரம் (ரூ. 60 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் லக்சரி 1.4 T-GDi மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 15 லட்சத்து 29 ஆயிரம் (ரூ. 30 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் லக்சரி 1.5 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 15 லட்சத்து 49 ஆயிரம் (ரூ. 50 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் ல்கசரி பிளஸ் 6S 1.4 T-GDi மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 16 லட்சத்து 54 ஆயிரம் (ரூ. 35 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் ல்கசரி பிளஸ் 6S 1.4 T-GDi 7DCT ரூ. 17 லட்சத்து 44 ஆயிரம் (ரூ. 45 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் ல்கசரி பிளஸ் 6S 1.5 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 16 லட்சத்து 74 ஆயிரம் (ரூ. 55 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் ல்கசரி பிளஸ் 6S 1.5 டீசல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ரூ. 17 லட்சத்து 64 ஆயிரம் (ரூ. 65 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் ல்கசரி பிளஸ் 7S 1.4 T-GDi மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 16 லட்சத்து 59 ஆயிரம் (ரூ. 45 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் ல்கசரி பிளஸ் 7S 1.4 T-GDi 7DCT ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம் (ரூ. 50 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் ல்கசரி பிளஸ் 7S 1.5 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 16 லட்சத்து 79 ஆயிரம் (ரூ. 60 ஆயிரம் அதிகம்)
கியா கரென்ஸ் ல்கசரி பிளஸ் 7S 1.4 டீசல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ரூ. 17 லட்சத்து 69 ஆயிரம் (ரூ. 70 ஆயிரம் அதிகம்)