Realme 9: சூப்பர் டூப்பர் கேமராவுடன் குறைந்த விலை ரியல்மி ஸ்மார்ட்போன்...வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

By Kevin Kaarki  |  First Published Apr 4, 2022, 1:41 PM IST

Realme 9: புதிய ரியல்மி 9 4ஜி மாடல் அறிமுக நிகழ்வு ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் அக்கவுண்ட்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.


ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 9 சீரிஸ் மாடல்களில் புதுவரவு ஆகும். ஏற்கனவே ரியல்மி 9i, ரியல்மி 9 5ஜி, ரியல்மி 9 5ஜி ஸ்பீடு எடிஷன், ரியல்மி 9 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி போன்ற மாடல்கள் ரியல்மி 9 சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுளஅளன.

சமீபத்தில் ரியல்மி நிறுவனம் 108MP ப்ரோலைட் கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போன் ரியல்மி 9 சீரிசில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது. மேலும் ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது. 

Latest Videos

undefined

இந்திய வெளியீட்டு விவரம்:

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி கடந்த சனிக் கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்திய சந்தையில் புதிய ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 7 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது.

புதிய ரியல்மி 9 4ஜி மாடல் அறிமுக நிகழ்வு ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் அக்கவுண்ட்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 

Are you ready to ?

Featuring a 108MP ProLight Camera, is going to revolutionize the way you click pictures.

Launching at 12:30 PM, 7th April, on our official channels.

Know more: https://t.co/kfGHFQB9m0 pic.twitter.com/MrhSSjO0Qd

— realme (@realmeIndia)

 

ரியல்மி 9 4ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: 

புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் IPS LCD, 144Hz AMOLED டிஸ்ப்ளே, 108MP ப்ரோலைட் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 6GB ரேம், 128GB மெமரி, 8GB ரேம், 128GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,. யு.எஸ்.பி. டைப் சி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

விலை  விவரங்கள்:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் மீடியோர் பிளாக், சன்பர்ஸ்ட் கோல்டு மற்றும் ஸ்லாட்ர்கேஸ் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

click me!