Volkswagen Polo Legend : 2009 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கிய நிலையில், போலோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு விற்னைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமான ஸ்போர்ட் ஹேட்ச்பேக் மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ இந்தியாவில் 12 ஆவது ஆனிவர்சரியை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ ஹேட்ச்பேக் மாடலின் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. போலோ லெஜண்ட் எடிஷன் என அழைக்கப்படும் புது ஹேட்ச்பேக் GT TSI வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
என்ஜின்:
புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ லெஜண்ட் எடிஷன் மாடலில் 1 லிட்டர் 3 சிலிண்டர் TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 110 பி.எஸ். பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. போலோ மாடலின் மற்ற வேரியணட்களும் இதே அளவு செயல்திறன் வழங்குகின்றன.
மாற்றங்கள்:
மற்ற வேரியண்ட்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காண்பிக்கும் வகையில் புதிய போலோ லெஜண்ட் எடிஷனில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஃபோக்ஸ்வேகன் போலோ லிமிடெட் எடிஷன் மாடலின் முன்புற ஃபெண்டர், பூட் பேட்ஜ் உள்ளிட்டவைகளில் லெஜண்ட் டைடில் இடம்பெற்று இருக்கிறது. பக்கபாட்டில் பாடி கிராஃபிக்ஸ், பிளாக் டிரன்க் கார்னிஷ் மற்றும் பிளாக் ரூஃப் ஃபாயில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ லெஜண்ட் லிமிடெட் எடிஷன் மாடல் நாடு முழுக்க 151 விற்பனை மையங்களில் கிடைக்கிறது. "வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எமோஷனை உருவாக்கி பிரபல மாடல்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் போலோ இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட தேதியில் இருந்து, இன்று வரை ஃபோக்ஸ்வேகன் போலோ குடும்பங்கள் வாங்க நினைக்கும் முதல் கார் மாடலாக இருந்து வருகிறது."
"ஸ்போர்டி டிசைன், தலைசிறந்த பாதுகாப்பு, ஓட்டுவதற்கு சிறந்த அனுபவம், பிராண்டின் உறுதிமிக்க தரம் என ஏராளமான காரணங்காளால் ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல் இன்றும் பலர் வாங்க விரும்பும் தேர்வாக இருந்து வருகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் விரும்பப்படும் மாடலாக போலோ இருக்கிறது. இதற்கு கொண்டாட்டம் மிகவும் அவசியம். இதற்காகவே போலோ லெஜண்ட் லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது," என ஃபோக்ஸ்வேகன் பாசன்ஜர் கார்ஸ் இந்தியா நிறுவன பிராண்டு இயக்குனர் அசிஷ் குப்தா தெரிவித்தார்.
அறிமுகம்:
2009 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கிய நிலையில், போலோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு விற்னைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஃபோக்ஸ்வேகன் கார் என்ற பெருமையை போலோ பெற்று இருக்கிறது. இந்தியாவில் போலோ மாடல் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
டூயல் ஏர்பேக் கொண்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஹேட்ச்பேக் மாடலாகவும் ஃபோக்ஸ்வேகன் போலோ இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட போது நாட்டில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையை பெற்றது. 2014 ஆம் ஆண்டு வாக்கில் ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல் குளோபல் NCAP பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியது.