Harley Davidson Sportster: இந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் மாடல் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது புதிய ஸ்போர்ட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் மாடல் ஏப்ரல் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்போர்ட்ஸ்டர் மாடல் ஹார்லி ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ஸ்போர்ட்ஸ்டர் மாடல் வித்தியாசமாக காட்சி அளிக்கும் என தற்போதை. டீசர்களில் தெரியவந்துள்ளது.
புது அப்டேட்கள்:
அதன்படி ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் மாடலில் வட்ட வடிவ ஹெட்லைட், பிகினி ஃபேரிங், செவ்வக வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுதவிர பெரிய அலாய் வீல்கள், மெல்லிய டையர்கள் வழங்கப்பட இருக்கிறது. பக்கவாட்டில் மேம்பட்ட ரைடிங் பொசிஷன், அதிக சவுகரியமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் மாடலில் ரெவல்யூஷன் மேக்ஸ், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதில் லோ-ஸ்லங் எக்சாஸ்ட் பைப் காணப்படுகிறது. புதிய ஸ்போர்ட்ஸ்டர் மாடலில் ரெவல்யூஷன் மேக்ஸ் 1250 என்ஜின் அல்லது 975 என்ஜின் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இத்துடன் வளைந்த ஃபெண்டர், டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
விலை விவரங்கள்:
மிக விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் மாடல் முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும். தற்போதைய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலின் விலை ரூ. 15.51 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் மாடல் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஸ்போர்ட்ஸ்டர் எஸ் அம்சங்கள்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடல் இந்திய சந்தையில் ரூ. 15.51 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1957 ஆண்டு மிகவும் பிரபலமாக இருந்த ஸ்போர்ட்ஸ்டர் மாடல் அதிநவீன அம்சங்கள் மற்றும் தலைசிறந்த வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டு புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மாடலில் முற்றிலும் புதிய ரெவல்யூஷன் மேக்ஸ் 1250T ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு லிக்விட் கூல்டு என்ஜின் ஆகும். இதில் ஓவர்ஹெட் கிளாம்ஷாஃப்ட்கள், வேரியபில் வால்வு டைமிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அதிவேகமாக செல்லும் போது வாகனம் கண்ட்ரோலாக இருக்கும் வகையிலான பவர்பேண்ட் வழங்குகிறது. இத்துடன் ஸ்போர்ட், ரோட் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவை ஒரே சீரான பவர் டெலிவரி, என்ஜின் பிரேக்கிங், கார்னரிங் என்ஹான்ஸ்டு ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் என்ஹான்ஸ்டு டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.