மேம்பட்ட நெக்சான் EV மாடலில் முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது நீண்ட ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக புதிய நென்க்சான் EV மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ரேன்ஜ்:
undefined
தற்போது டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் நெக்சான் EV மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 125 பி.ஹெச்.பி. பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. புதிய மேம்பட்ட நெக்சான் EV மாடலில் முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
மேம்பட்ட பவர்டிரெயின் மட்டுமின்றி புதிய டாடா நெக்சான் EV மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி புதிய நெக்சான் EV மாடலில் ஏர் பியூரிஃபையர், வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ESP போன்ற அம்சங்கள், பின்புறம் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படும் என தெரிகிறது.
ஃபாஸ்ட் சார்ஜர்:
புதிய டாடா நெக்சான் EV மாடலுடன் 6.6 கிலோவாட் AC சார்ஜர் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய சார்ஜர் காரை முழுமையாக சார்ஜ் செய்யும் நேரத்தை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய நெக்சான் EV மாடலில் 3.3 கிலோவாட் AC சார்ஜர் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சார்ஜர் காரை முழுமையாக சார்ஜ் செய்ய பத்து மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது.
முந்தைய தகவல்கள்:
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய நெக்சான் EV மாடலில் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், புதிய அலாய் வீல் டிசைன் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV விலை தற்போது ரூ. 14.29 லட்சம் என துவங்குகிறது. அந்த வகையில் புதிய மேம்பட்ட மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
டாடா நெக்சான் EV மாடல் பற்றி டாடா மோட்டார்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்திய சந்தையில் புதிய டாடா நெக்சான் EV மாடல் எம்.ஜி. ZS EV, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.