ஐபோன் 13 மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரை தள்ளுபடி... வெளியான சூப்பர் தகவல்..!

By Kevin Kaarki  |  First Published Apr 2, 2022, 3:46 PM IST

டிஜிட்டல் டிஸ்கவுண்ட் டேஸ் சலுகைகளை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் பெற்றுக் கொள்ளலாம்.


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 மாடல் சிறப்பு சலுகைகளுடன் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் நடத்தும் சிறப்பு விற்பனையில் ஐபோன் 13 மாடலுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. ரிலைன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் நடைபெறும் டிஜிட்டல் டிஸ்கவுண்ட் டேஸ் சிறப்பு விற்பனை இன்று (ஏப்ரல் 2) துவங்கிய நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ரிலைன்ஸ் நிறுவனத்தின் ரிடெயில் ஸ்டோரில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், ஏ.சி., குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின் மற்றும் இதர சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்கவுண்ட் டேஸ் சலுகைகளை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் பெற்றுக் கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

வங்கி சலுகை:

ரிலையன்ஸ் ஜியோ தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சார்ந்த தள்ளுபடிகளை வழங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு அதிகபட்சம் 7.5 சதவீதம் உடனடி தள்ளுபடி, ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ. 80 ஆயிரத்திற்கும் அதிக விலை கொண்ட பொருட்களை வாங்க வேண்டும். 

ஐபோன் 13 சலுகை:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ. 61 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 74 ஆயிரத்து 999 ஆகும். இந்த விலை ஐபோன் 13 மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் கேஷ்பேக், இன்-ஸ்டோர் தள்ளுபடி, எக்சேன்ஜ் மதிப்பு மற்றும் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவைகளை கழிக்கும் போது கிடைக்கும். 

ஆப்பிள் ஐபோன் 13 மாடல் 128GB, 256GB மற்றும் 512GB என மூன்று விதமான மெமரி ஆப்ஷ்ன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரெட், வைட், மிட்நைட், புளூ, பின்க் மற்றும் கிரீன் என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது. 

இதர சலுகைகள்:

ஆப்பிள் ஐபோன் மட்டும் இன்றி சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி S22 பிளஸ் கிரீன் நிற வேரியண்ட் ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இதேபோன்று 12th Gen இண்டெல் கோர் ஐ5 ஹெச்.பி. லேப்டாப் மாடலை ரூ. 71 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்கிறது. இந்த லேப்டாப்பில் 16GB ரேம், 512GB SSD ஸ்டோரேஜ், விண்டோஸ் 11, மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் 21 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 

click me!