அமெரிக்காவில் தனது சாதனங்களுக்கு உடனடி சர்வீஸ் வழங்கும் நோக்கில் சாம்சங் நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சாம்சங் நிறுவனம் செல்ஃப் ரிப்பேர் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தாங்களாகவே தங்களின் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களை சரி செய்து கொள்ள முடியும்.
பயனர்கள் எவ்வாறு தங்களின் ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட பிரச்சினைகலை சரி செய்ய வேண்டும் போன்ற விவரங்கள் அனைத்தையும் சாம்சங் நிறுவனமே வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், முதற்கட்டமாக இந்த திட்டம் அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
undefined
இதன் மூலம் சாதனங்களின் ஆயுட்காலத்தை பயனர்கள் மேலும் நீட்டித்துக் கொள்ள முடியும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தை வழங்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஐ-ஃபிக்சிட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அமெரிக்காவில் தனது சாதனங்களுக்கு உடனடி சர்வீஸ் வழங்கும் நோக்கில் சாம்சங் நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது செல்ஃப்-ரிப்பேர் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முதலில் ஃபிளாக்ஷிப் மாடல்கள்:
முதற்கட்டமாக கேலக்ஸி S20 மற்றும் கேலக்ஸி S21 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு செல்ஃப்-ரிப்பேர் திட்டம் வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே பயன்படுத்தி, பாழாகி போன பாகங்களை பயனர்கள் சாம்சங் நிறுவனத்திடமே வழங்கலாம். சாம்சங் இவற்றை மறுசுழற்சி செய்வதாக அறிவித்து உள்ளது. எதிர்காலத்தில் சாம்சங் நிறுவனத்தின் மேலும் சில சாதனங்களுக்கும் செல்ஃப்-ரிப்பேர் திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மென்பொருள் அப்டேட்:
இதுதவிர சாம்சங் நிறுவனம் ரஷ்யாவில் தனது கேலக்ஸி A72 ஸ்மார்ட்போன் மாடலுக்கு மென்பொருள் அப்டேட் ஒன்றை வெளியிட்டு வருகிறது. A725FXXU4BVC1 எனும் ஃபர்ம்வேர் வெர்ஷனில் வெளியாகி இருக்கும் புது மென்பொருள் அப்டேட் ஸ்மார்ட்போனில் உள்ள 50 சதவீத பிரைவசி மற்றும் செக்யூரிட்டி குறைபாடுகளை சரி செய்து விடும். இதுதவிர ஸ்மார்ட்போன் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு விடும்.
உங்களது ஸ்மார்ட்போன் மாடலுக்கும் அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் -- டவுன்லோடு அண்ட் இன்ஸ்டால் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். முதற்கட்டமாக ரஷ்யாவில் வெளியிடப்பட்டு இருக்கும் மென்பொருள் அப்டேட் விரைவில் மற்ற நாடுகளிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.