மூன்று பிரைமரி கேமரா சென்சார்களிலும் 10-பிட் கலர் வசதி கொண்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் HD பிளஸ் E4 AMOLED வளைந்த டிஸ்ப்ளே, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், 32MP செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனஅ 1 பிராசஸர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் அதிகபட்சம் 12GB ரேம், 48MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று பிரைமரி கேமரா சென்சார்களிலும் 10-பிட் கலர் வசதி கொண்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். கிளாஸ் மற்றும் மேட் ஃபினிஷ் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 10 ப்ரோ IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசசதி கொண்டிருக்கிறது.
undefined
ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் டூயல்-செல் 5000mAh பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனினை முழுமையாக சார்ஜ் செய்ய 32 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இத்துடன் 50 வாட் ஏர்வூக் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனை 47 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். இத்துடன் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் 10 ப்ரோ அம்சங்கள்
- 6.7 இன்ச் 3216x1440 பிக்சல் குவாட் HD+ 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR4X ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 48MP பிரைமரி கேமரா, f/1.8, OIS
- 50MP 150° அல்ட்ரா வைடு லென்ஸ்
- 8MP டெலிபோட்டோ கேமரா, f/2.4, OIS
- 32MP செல்ஃபி கேமரா, f/2.4
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 80W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50W வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வொல்கானிக் பிளாக் மற்றும் எமிரால்டு ஃபாரஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 66 ஆயிரத்து 999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், ஒன்பிளஸ் வலைதளங்கள் மற்றும் இதர விற்பனை மையங்களில் ஏப்ரல் 5 ஆம் தேதி துவங்குகிறது.