கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையிலும், புது மாடலில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் தான் வழங்கப்பட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டெஸ்டினி 125 XTEC ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய ஹீரோ டெஸ்டினி 125 XTEC மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் எல்.இ.டி. ஹெட்லைட் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையிலும், புது மாடலில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் தான் வழங்கப்பட்டு உள்ளது.
எல்.இ.டி. லைட்டிங்:
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்டாண்டர்டு எடிஷன் மாடலில் எல்.இ.டி. பொசிஷன் லேம்ப் மற்றும் ஹாலோஜன் ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டெஸ்டினி 125 XTEC மாடலில் எல்.இ.டி. லைட்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் புதிய XTEC மாடலின் கிராப் ரெயில்கள் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கின்றன. மேலும் பேக்ரெஸ்ட் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிதாக அசத்தல் அம்சங்களை பெற்று இருக்கும் நிலையில், டெஸ்டினி மாடலில் முன்புற டிஸ்க் பிரேக் தற்போதும் வழங்கப்படவில்லை. புதிய ஹீரோ டெஸ்டினி 125 XTEC மாடலின் இரு புறங்களிலும் டிரம் பிரேக் யூனிட்களே வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று என்ஜினிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
என்ஜின்:
ஹீரோ டெஸ்டினி 125 XTEC மாடலிலும் 124.6சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.1 ஹெச்.பி. பவர், 10.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி பெற்று இருப்பதை அடுத்து புதிய டெஸ்டினி 125 XTEC, கிளாமர் XTEC மற்றும் பிளெஷர் XTEC போன்ற மாடல்களுடன் இணைகிறது.
இதே அம்சம் ஹீரோ எக்ஸ்டிரீம் 200s மற்றும் எக்ஸ்பல்ஸ் போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட் என இரு பெரிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் டெஸ்டினி 125 XTEC மாடல் விலை அதன் ஸ்டாண்டர்டு எடிஷனை விட ரூ. 4 ஆயிரம் அதிகம் ஆகும்.
நிறங்கள்:
இந்திய சந்தையில் புதிய ஹீரோ டெஸ்டினி 125 XTEC மாடல் நெக்சஸ் புளூ, மேட் பிளாக், பியல் சில்வர் வைட், நோபில் ரெட், பேந்தர் பிளாக், செஸ்ட்நட் பிரவுன் மற்றும் மேட் ரே சில்வர் என மொத்தம் ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.