டிராய் உத்தரவு... ஒரு மாத வேலிடிட்டியுடன் 2 சலுகைகளை அறிவித்த ஏர்டெல்...!

By Kevin Kaarki  |  First Published Apr 2, 2022, 9:44 AM IST

ஏர்டெல் ரூ. 296 மற்றும் ரூ. 319 விலை பிரீபெயிட் சலுகைகளில்  கூடுதல் பலன்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. 


ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 296 மற்றும் ரூ. 319 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றில் ரூ. 296 பிரீபெயிட் சலுகையில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 319 பிரீபெயிட் சலுகையில் ஒரு மாதத்திற்கான வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 

டிராய் உத்தரவு:

Tap to resize

Latest Videos

முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு சலுகையாவது வழங்க வேண்டும் என மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டு இருந்தது. அதன் படி டிராய் அறிவிப்பு வெளியான சில மாதங்களில் ஏர்டெல், ஒரு மாத வேலிடிட்டி வழங்கும் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஏர்டெல் ரூ. 296 மற்றும் ரூ. 319 பிரீபெயிட் சலுகைகள் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

பலன்கள்:

ஏர்டெல் ரூ. 296 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் மொத்தமாக 25GB டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஏர்டெல் ரூ. 319 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2GB டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.  

ஏர்டெல் ரூ. 296 மற்றும் ரூ. 319 விலை பிரீபெயிட் சலுகைகளில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனை 30 நாட்களுக்கு டிரையல் முறையில் பயன்படுத்துவதற்கான சந்தா, மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24x7 சர்கில் வசதி, ஃபாஸ்டேக் ரூ. 100 கேஷ்பேக், வின்க் மியூசிக் பயன்படுத்துவதற்கான வசதி உள்ளிட்ட கூடுதல் பலன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஏர்டெல் ரூ. 296 மற்றும் ரூ. 319 விலை பிரீபெயிட் சலுகைகள் ஜனவரி மாத வாக்கில் டிராய் பிறப்பித்த உத்தரவின் பேரில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 259 விலை கொண்ட பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இதில் ஒரு மாதத்திற்கான வேலிடிட்டி வழங்கப்பட்டது. ஜியோவின் ரூ. 259 விலை சலுகை வழங்கும் பலன்களே ஏர்டெல் ரூ. 319 சலுகையிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ரூ. 259 ஜியோ சலுகையிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். 

click me!