கவாசகி இந்தியா நிறுவனம் தனது மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அசத்தலான தள்ளுபடியை அறிவித்து இருக்கிறது.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் உயர் ரக பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக கவாசகி இந்தியா நிறுவனம் இருக்கிறது. பல்வேறு விலை பட்டியலில் மோட்டார்சைக்கிள் மாடல்களை கவாசகி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஒரு மோட்டார்சைக்கிள் மாடலுக்கு மட்டும் கவாசகி இந்தியா நிறுவனம் அசத்தல் சலுகையை அறிவித்து உள்ளது.
கவாசகி இந்தியா நிறுவனம் தனது மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள், வெர்சிஸ் 650 மாடலுக்கு அசத்தலான தள்ளுபடியை அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்த மோட்டார்சைக்கிள் மாடலை வாங்குவோருக்கு ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான தள்ளுபடி வுவச்சர் வழங்கப்படுகிறது. கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சலுகை விவரங்கள்:
அந்த வகையில் டிஸ்கவுண்ட் வவுச்சர் சலுகையை சேர்க்கும் போது கவாசகி வெர்சிஸ் 650 மாடல் விலை ரூ. 6 லட்சத்து 45 ஆயிரம் என மாறி விடும். இந்த சலுகை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கு மாற்றாக விரைவில் 2022 கவாசகி வெர்சிஸ் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார்சைக்கிள் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
அம்சங்கள்:
புதிய மேம்பட்ட மாடலில் ரிவைஸ்டு ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட TFT கலர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 650சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 64.8 பி.ஹெச்.பி. பவர், 60.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள், இன்வெர்டட் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன், டூயல் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 2022 கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் புதிய கவாசகி வெரிசிஸ் 650 அறிமுகம் செய்யப்படலாம்.