வெறும் ரூ.2599 மட்டுமே..வாட்ஸ் அப், யூ டியூப் என பல வசதிகளுடன் ஜியோவின் புதிய ஃபோன் அறிமுகம்..!

By Ramya s  |  First Published Oct 30, 2023, 3:45 PM IST

JioPhone Prima 4G என்ற இந்த ஃபோன் இந்தியாவில் மலிவு விலை ஃபோன்களில் ஒன்றாகும்.


முகேஷ் அம்பானி கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளார், அந்த வகையில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மலிவு விலை போன் ஒன்றை அவர் அறிமுகம் செய்துள்ளார். JioPhone Prima 4G என்ற இந்த ஃபோன் இந்தியாவில் மலிவு விலை ஃபோன்களில் ஒன்றாகும். ஆனால் இந்த ஃபோனில் மற்ற ஃபோன்களை விட கூடுதல் அம்சங்கள் உள்ளன. 

இது வெறும் ரூ.2,599 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி ஃபோனில் வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் செயலிகளை பயன்படுத்த முடியும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள மலிவான போன்களில் ஒன்றாகும். முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களில் அறிமுகப்படுத்திய இரண்டாவது 4ஜி போன் இதுவாகும்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்தியாவில் 2ஜி சகாப்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் 25 கோடி ஃபீச்சர் போன் பயனாளர்களை விடுவிக்க ஜியோ நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக இந்தியாவில் Rs 999 ஜியோ பாரத் V2 தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. இந்த சூழலில் புதிய அம்சங்கள் மற்றும் அணுகலை வழங்குவதற்காக, ரிலையன்ஸ் ஜியோ இப்போது இந்தியாவில் JioPhone Prima 4G ஐ தீபாவளிக்கு முன்னதாக அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் தவிர, புதிய ஜியோ ஃபோனில் ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோசாவ்ன், ஜியோ நியூஸ் மற்றும் பல செயலிகளையும் இயக்க முடியும். மேலும் UPI கட்டணங்களுக்கான JioPay வசதியும் உள்ளது.

அன்லிமிடெட் டேட்டா.. நெட்பிளிக்ஸ் 84 நாட்களுக்கு இலவசம்.. இப்படியொரு ரீசார்ஜ் பிளான் தெரியுமா?

ஜியோவின் இந்த புதிய JioPhone Prima 4G ஆனது JioMart இல் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணங்களில் கிடைக்கிறது. ஜியோ மார்ட்டில் இந்த ஃபோனை வாங்க முடியும். கேஷ்பேக் ஒப்பந்தங்கள், வங்கிச் சலுகைகள் மற்றும் கூப்பன்கள் உள்ளிட்ட பல வெளியீட்டுச் சலுகைகளையும் இந்த ஃபோன் கொண்டுள்ளது.

புதிய JioPhone Prima 4G போனில், 4G இணைப்பு மற்றும் 23 மொழிகளுக்கான ஆதரவுடன் வருகிறது. JioPhone Prima 4G ஆனது 128GB விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்துடன் (expandable storage) ARM Cortex A53 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஃபோன்  KaiOS இல் இயங்குகிறது, இது 1200 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை ஆதரிக்கும் Firefox OS அடிப்படையிலான இயக்க முறைமையாகும். ஒற்றை சிம் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் இந்த போன் வருகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் 1800mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன.

click me!