ஆண்ட்ராய்டுக்கு ஆப்பு வைக்கப் போறது இதுதானா! சியோமியின் புதிய ஹைப்பர் ஓஎஸ் விரைவில் அறிமுகம்!

By SG Balan  |  First Published Oct 29, 2023, 4:35 PM IST

HyperOS இயங்குதளம் சியோமி நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன், ஸ்டார்ட் வாட்ச், ஸ்டார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது


சியோமி (Xiaomi) பத்து ஆண்டுகளுக்கும் மேலான தனது மொபைல் போன்களில் பயன்படுத்திவரும் MIUI ஐ இணைத்து ஹைப்பர் ஓஎஸ் (HyperOS) என்ற இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது. இது பயனர்களை மையமாகக் கொண்ட OS என்று சியோமி நிறுவனம் கூறுகிறது.

இந்த இயங்குதளம் சியோமி நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன், ஸ்டார்ட் வாட்ச், ஸ்டார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

சியோமி நிறுவனம் 13 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 1.175 பில்லியன் பயனர்களை ஈர்த்துள்ளது. 200 வெவ்வேறு பிரிவுகளில் அதன் தயாரிப்புகளை விரிவுபடுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், 2017 இல் தான் ஒரு புதிய இயங்குதளத்தை உருவாக்கத் தொடங்கியது.

அனைத்து சாதனங்ககளிலும் பயன்படுத்தக்கூடிய இயங்குதளமாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் HyperOS ஐ வடிவமைத்திருக்கிறது.

சியோமி 14 சீரீஸ், சியோமி வாட்ச் எஸ்3 மற்றும் சியோமி டிவி எஸ் ப்ரோ 85” மினி எல்ஈடி ஆகியவற்றில் முன்பே HyperOS நிறுவப்பட்டது. இந்த இயங்குதளம் மூலம் புத்தம் புதிய இன்டர்பேஸ் கிடைக்கும் என்பதற்கு சிய்யோமி உறுதியளிக்கிறது.

ஸ்மார்ட்போன்களுக்கான HyperOS இயங்குதளம் ஆண்டிராய்டு ஓபன் சோர்ஸ் புராஜெட்டை (Android Open Source Project) அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆண்ட்ராய்டு 14 போன்ற அம்சங்கள் இதிலும் இருக்கும்.

அதிக பயன்பாட்டிலும் HyperOS நிலையான செயல்திறனை வழங்கும் என்று சியோமி கூறுகிறது. இதில் ஹைப்பர் கனெக்ட் அம்சத்தைக் கொண்ட இந்த ஓஎஸ் இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களையும் எங்கிருந்தும் கட்டுப்படுத்தும் வசதியை பயனர்களுக்குக் கொடுக்கிறது.

ஹைப்பர் ஓஎஸ் இயங்குதளத்தில் உள்ள HyperMind AI என்ற அம்சம் பயனர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேப சாதனங்களைச் செயல்பட வைக்கிறது. மேம்பட்ட அம்சங்களுடன் மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களை நிறுவி பயன்படுத்துவதற்கான அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. TEE மற்றும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பயனர் பாதுகாப்பிற்கு சியோமி முன்னுரிமை அளிக்கிறது.

ரெட்மீ K60 அல்ட்ரா, சியோமி ஐபாட் 6 மேக்ஸ் 14 இன்ச், சியோமி டிவி எஸ் ப்ரோ 65 இன்ச், சியோமி டிவி எஸ் ப்ரோ 75 இன்ச், சியோமி சவுண்ட் ஸ்பீக்கர், மற்றும் சியோமி ஸ்மார்ட் கேமரா 3 ப்ரோ ஆகிய சியோமி தயாரிப்புகளில் வரும் டிசம்பரில் இருந்து HyperOS பயன்பாட்டுக்கு வரும்.

சீனாவில் HyperOS இன் உள்நாட்டு பதிப்பு அக்டோபர் 26 ஆம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கும் என்று சியோமி அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தைக்கு HyperOS 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

click me!