2021ஆம் ஆண்டில் மட்டும் கூகுள் சர்ச் விளம்பரங்கள் மூலம் நிறுவனத்துக்கு 146.4 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளதாக பிரபாகர் ராகவன் கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனம் தனது குரோம் சர்ச் எஞ்சின் பிரதான தேடல் தளமாக இருப்பதற்காக 2021ஆம் ஆண்டில் மட்டும் 26.3 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. வெப் பிரவுசர் மற்றும் மொபைல் போன்களில் கூகுள் குரோம் சர்ச் எஞ்சினை பிரதான தேடல் தளமாக வைத்திருக்க மற்ற நிறுவனங்களுக்கு இந்தத் தொகையைக் கொடுத்திருக்கிறத்து.
பெரும்பாலான வெப் பிரவுசர்கள் மற்றும் மொபைல் போன்களில் முதன்மையான தேடுபொறி செயலியாக கூகுள் குரோம் இடம்பெற்றுள்ளது. இது வணிகப் போட்டிக்கான வாய்ப்பை கேள்விக்குள்ளாக்கி கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
undefined
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இத்தகைய வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜரான கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி பிரபாகர் ராகவன், கூகுள் குரோமை முதன்மை தேடுபொறியாக வைத்திருப்பதற்கான செலவு 2014ஆம் ஆண்டில் இருந்து மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் தேடல் மற்றும் விளம்பரம் ஆகிய பிரிவுகளுக்குப் பொறுப்உப வகிக்கும் முக்கிய அதிகாரியான பிரபாகர் ராகவன், 2021ஆம் ஆண்டில் மட்டும் கூகுள் சர்ச் விளம்பரங்கள் மூலம் நிறுவனத்துக்கு 146.4 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இத்தகவலை ப்ளூம்பெர்க் நிறுவனம் கசிய விட்டுள்ள நிலையில், இதைக் குறித்து கூகுள் நிறுவனம் இதுவரை பதில் ஏதும் தரவில்லை. ஆனால், தங்கள் ஒப்பந்தங்கள் சட்டபூர்வமானவை என்றும், தேடல் மற்றும் விளம்பர வணிகங்களை போட்டித்தன்மையுடன் வைத்திருக்க முதலீடு செய்துள்ளதாகவும் கூகுள் சார்பில் வாதிடப்பட்டதாகத் தெரிகிறது. பயனர்கள் தங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால் வேறு சர்ச் எஞ்சினுக்கு மாறிக்கொள்ளலாம் என்றும் கூகுள் வாதிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் தங்கள் சர்ச் எஞ்சின் வருவாய் தொடர்பாக வெளியாகியுள்ள எண்ணிக்கையை நிராகரித்துள்ளது. அவற்றை வெளியிடுவது எதிர்கால ஒப்பந்தங்களைப் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், கூகுள் தரப்பு வாதத்தை ஏற்காத நீதிபதி அமித் மேத்தா எண்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.