JioPhone Next : ஜியோபோன் நெக்ஸ்ட் இப்பவே கடையில் கிடைக்குது! விலை மற்றும் விவரங்கள்

By Kevin Kaarki  |  First Published Mar 5, 2022, 2:58 PM IST

JioPhone Next : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் தனது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை 4ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

உலக சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை 4ஜி ஸ்மார்ட்போன் எனும் பெருமையை ஜியோபோன் நெக்ஸ்ட் பெற்று இருக்கிறது. இதில் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. 

Tap to resize

Latest Videos

undefined

விலை விவரங்கள்

இந்திய சந்தையில் ஜியோபோன் நெக்ஸ்ட் விலை ரூ. 6,499 ஆகும். ஜியோபோன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜியோ வலைதளம் அல்லது செயலியில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் உங்களுக்கு அருகாமையில் உள்ள ஜியோ ஸ்டோரிலேயே கிடைக்கிறது. நாடு முழுக்க ஆஃப்லைன் ஸ்டோர் சென்று இந்த ஸ்மார்ட்போனை ரூ. 6499 விலையில் வாங்கிட முடியும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள்

- 5.45 இன்ச் HD டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் QM 215 பிராசஸர்
- 2GB ரேம்
- 32GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13MP பிரைமரி கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
- 3500mAh பேட்டரி
- ப்ளூடூத், வைபை, ஹாட்ஸ்பாட், OTG வசதி

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலுக்கு கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

click me!