அதுக்கெல்லாம் காசு தர முடியாது! ஆய்வில் மாஸ் காட்டிய இந்திய பெண்கள்

By Kevin KaarkiFirst Published Mar 5, 2022, 2:37 PM IST
Highlights

மியூசிக் ஸ்டிரீமிங் பயன்பாடு பற்றி இந்திய பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய பதில்கள் கிடைத்துள்ளன.

இந்திய பெண்களில் பெரும்பாலானோர் மியூசிக் ஸ்டிரீமிங்கை இலவசமாக பயன்படுத்தவே விரும்புகின்றனர் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வு நிறுவனமான யோகோவ் நடத்திய சமீபத்திய ஆய்வில் 21 முதல் 29 வரையிலான பெண்கள் மத்தியில் இலவச ஆன்லைன் மியூசிக் மிகவும் பிரபலமாக இருப்பது தெரியவந்துள்ளது. 

எனினும், 30 முதல் 39 வயதுடைய பெண்கள் மியூசிக் சேவைகளுக்கு கட்டணம் செலுத்துவது வாடிக்கையான ஒன்று தான் என பதில் அளித்துள்ளனர். இலவச மியூசிக் ஏராளமாக கிடைப்பதும், சந்தா முறையில் உள்ள குழப்பங்களே பெண்கள் இலவச மியூசிக் சேவையை விரும்ப காரணங்களாக கூறப்படுகின்றன. 

பிரபல மியூசிக் ஸ்டிரீமிங் சேவைகளில் வீடியோ ஸ்டிரீமிங் வலைதளங்களையே பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர். ஒருபிரிவினர் ஃபைல் ஷேரிங் வலைதளங்களில் இருந்து இலவச மியூசிக் தரவிறக்கம் செய்கின்றனர். வழக்கமாக மியூசிக் கேட்கும் வழிமுறைகளான சி.டி., போர்டபில் ரேடியோ, வினைல் போன்றவைகளை பயன்படுத்தும் வழக்கம் பெருமளவு குறைந்துள்ளது.

இலவச ஸ்டிரீமிங் சேவையை பயன்படுத்துவது நகரங்களில் வசிக்கும் இந்திய பெண்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. நகரங்களில் வசிக்கும் பெண்களில் பலர் ஸ்டிரீமிங் சேவையை பயன்படுத்தி மியூசிக் கேட்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் வசிக்கின்றனர். 

கடந்த 12 மாதங்களில் மியூசிக் ஸ்டிரீமிங் சேவைகளை பன்படுத்துவோர் எண்ணிக்கை அனைத்து பாலினத்தவர்களிடமும் 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று பாட்காஸ்ட் ஸ்டிரீமிங்கும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை 9 ஆயிரம் பேரிடம் கலந்து கொண்டு ஆய்வில் இருந்து தயாரிக்கப்பட்டது ஆகும்.

click me!