ரூ. 6599 விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் - லாவா அதிரடி

By Kevin Kaarki  |  First Published Mar 5, 2022, 1:17 PM IST

லாவா நிறுவனத்தின் புதிய X2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா தனது முதல் X சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. லாவா X2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் மொபைல் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை லாவா X2 மாடலில் 6.5 இன்ச் HD+IPS டிஸ்ப்ளே, 2GB ரேம், 32GB மெமரி, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், ஆண்ட்ராய்டு ஓ.எஸ்., 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.  இத்துடன் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி, கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5, 3.5mm ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் மற்றும் OTG சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

லாவா X2 அம்சங்கள் 

- 6.5 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர்
- 2GB ரேம்
- 32GB மெமரி
- 8MP பிரைமரி கேமரா
- 5MP செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு ஓ.எஸ்.
- 5000mAh பேட்டரி
- கைரேகை சென்சார்
- வைபை, ப்ளூடூத் 5, 3.5mm ஆடியோ ஜாக்
- யு.எஸ்.பி. டைப் சி

புதிய லாவா X2 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 6,999 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்பதிவு செய்வோர் புதிய லாவா ஸ்மார்ட்போனினை ரூ. 6599 விலையில் வாங்கிட முடியும்.

click me!