ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் 5ஜி மாடல் விலை மற்றும் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் நீண்ட காலமாக இணையத்தில் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஆண்டே அறிமுகமாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜியோபோன் 5ஜி இதுவரை அறிமுகம் செய்யப்படாமலேயே இருக்கிறது. புதிய ஜியோபோன் 5ஜி மாடலின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி ஜியோபோன் 5ஜி மாடலில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், அட்ரினோ 619 GPU, 4GB ரேம், 32GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கூகுள் பிளே சேவைகள் மற்றும் ஜியோ டிஜிட்டல் செயலிகள் வழங்கப்படுகின்றன.
ஜியோபோன் நெக்ஸ்ட் போன்றே இதுவும், கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் ஆல்வேஸ் ஆன் கூகுள் அசிஸ்டண்ட், ரீட்-அலவுட் டெக்ஸ்ட், இன்ஸ்டண்ட் டிரான்ஸ்லேட், பல்வேறு இந்திய மொழிகளுக்கான வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் N3, N5, N28, N40, மற்றும் N78 6G போன்ற பேண்ட்களை சப்போர்ட் செய்யும்.
புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஜியோபோன் 5ஜி மாடலில் 5000mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. விலையை பொருத்தவரை ஜியோபோன் 5ஜி மாடல் ரூ. 9 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.