ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட் - "தன் தனா தன்"...அசத்தும் அம்பானி..!

First Published Apr 12, 2017, 10:30 AM IST
Highlights
jio offered new plan for their customers


 டேட்டா சேவையை பொறுத்தவரையில் ஜியோ இல்லையென்றால்,  எதையோ இழந்தது போல  ஒரு  தோற்றம் மக்கள் மத்தியில் உள்ளது . கடந்த  மார்ச் 31  ஆம் தேதியுடன் இலவச சேவை வழங்குவதை முடித்துக்கொண்டு , கட்டண சேவையில் இறங்க  நினைத்தது ஜியோ. ஆனால் வாடிக்கையாளர்களின் நலன்  கருதி மேலும் 1 5  நாட்களுக்கு  இலவச சேவையை  நீட்டித்தது. இதனால் கடும் கடுப்பான  மற்ற  தொலை தொடர்பு  நிறுவனங்களான  வோட போன் மற்றும்  ஏர்டேல் உள்ளிட்ட  நிறுவனங்கள் , தொலை  தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான  ட்ராயிடம்   முறையிட , ஜியோ  தனது ப்ரைம் மெம்பர்ஷிப் இலவச  சேவையை  நிறுத்திக் கொண்டது.

ஆனாலும் சும்மா  இருக்குமா  ஜியோ...?

உடனே  ஒரு புது அறிவிப்பை  வெளியிட்டது. இந்த சலுகையில்  வாடிக்கையாளர்கள் மனம்  கவரும்  திட்டங்கள்  அறிமுகப் படுத்த பட்டுள்ளன.

அதாவது ‘தன் தனா தன்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தன் தனா தன்’ என்ற புதிய திட்டத்தை  அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம் , இந்தப் புது திட்டம் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கும் , பிரைம்   வாடிக்கையாளர்கள்   அல்லாதவர்களுக்கும்  பல  புதிய  திட்டத்தை   அறிமுகம்   செய்துள்ளது 

 அதன்படி, பிரைம் வாடிகக்கையாளர்கள்  

 ரூ.309  - நாள் ஓன்றுக்கு 1 ஜிபி டேட்டா

 ரூ.509  - நாள் ஓன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும்  வழங்குகிறது .

கால  அவகாசம்  : 8 4 நாட்கள்

பிரைம்  வாடிக்கையாளர்கள்  அல்லாதவர்கள்

 ரூ.408 ( 309+99)  -   நாள் ஓன்றுக்கு 1 ஜிபி டேட்டாவும்,  

 ரூ. 608 (509-99)  -  நாள் ஓன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும்  பெற  முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது

கால அவகாசம் : 84 நாட்கள்

மேலும்  மேற்குறிப்பிட்ட  ஆபர்களில்  ரீசார்ஜ்  செய்தால்  இலவச  கால்ஸ்  வசதி, எஸ் எம் எஸ்,  வீடியோ  உள்ளிட்ட  அனைத்தும்  இலவசமாக   பெறலாம்   என் பது   குறிப்பிடத்தக்கது .   

click me!