ஜியோ வழங்கிய எண்ணற்ற சலுகையால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன என்றே கூறலாம்.
கடந்த 6 மாத காலமாக இலவச டேட்டா மற்றும் கால்ஸ் வழங்கிய ஜியோவால், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க முடியாமல், பல சலுகைகளை வழங்கியது . இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதியுடன் இலவச சேவை முடிந்து கட்டண சேவையை தொடங்க இருந்த ஜியோ, எதிர்பாராத விதமாக இன்னும் 15 நாட்களுக்கு சேவையை நீட்டித்தது. இதனால் கடுப்பான வோடபோன் மற்றும் ஏர்டெல், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையிட, சில பல கேள்விகளை ஜியோவிடம் கேட்டது ட்ராய்.
பின்னர் சலுகை நீட்டிக்கப்பட்டதற்கான கால அவகாசம் திரும்ப பெறுவதாக ஜியோ தெரிவித்தது
இந்நிலையில் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் சேர வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து விளம்பர தகவல்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், இவை டிராய் விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளது என வோடபோன் சார்பில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என ஏப்ரல் 6-ந்தேதி டிராய் சார்பில் வலியுறுத்தப்பட்ட பின்னரும் இதற்கான விளம்பரங்கள் மற்றும் குறுந்தகவல்கள் மூன்று நாட்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என வோடபோன் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜியோ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து வோடபோன் சார்பில் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இதன் காரணமாக ஜியோ சலுகையால் வோடபோன் மற்றும் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் கடும் கடுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .