Jio Plan: ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் 3 புதிய பிளான்கள் அறிமுகம்!

By Asianet TamilFirst Published Mar 27, 2023, 6:48 PM IST
Highlights

ஜியோவில் 3ஜிபி டேட்டாவுடன் கூடிய 3 புதிய பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை, அம்சங்கள், வேறு என்னென்ன பலன்கள் உள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.
 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சிறப்பு ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் டேட்டா பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அன்லிமிடெட் கிரிக்கெட் திட்டங்கள் ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.999 விலையில் வந்துள்ளது.

 இதில் தினசரி 3ஜிபி வரை டேட்டா என மொத்தம் 40ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மார்ச் 24 ஆம் தேதி வந்துள்ள இத்திட்டத்ின் மூலம், பயனர்கள் அன்லிமிடேட் வாய்ஸ் கால், SMS மற்றும் 5G பலன்களை பெற முடியும். கூடுதலாக, தடையில்லாமல் கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்கும் வகையில்,  ஆட் ஆன் டேட்டா பிளான்கள், அன்லிமிடெட் கிரிக்கெட் பிளான்களும் வழங்குகின்றன.

ஜியோ வழங்கும் அனைத்து புதிய கிரிக்கெட் சிறப்புத் திட்டங்கள் மற்றும் ஆட் ஆன் சேவைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்: 

ஜியோவின் புதிய கிரிக்கெட் பிளான்

ஜியோ ரூ 219 பிளான்: 

இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா வரம்பையும், அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 14 நாட்களுக்கு ஜியோ ஆப்ஸிற்கான இலவச சந்தா சேவை வழங்கப்படுகிறது. சிறப்புச் சலுகையாக, ரூ.25 மதிப்புள்ள 2ஜிபி டேட்டா-ஆட்-ஆன் வவுச்சரையும் இலவசமாக வழங்குகிறது. கூடுதலாக, ஜியோ வெல்கம் 5ஜி சலுகையைப் பெற்ற பயனர்கள் 5ஜி டேட்டாவை இலவசமாக அனுபவிக்க முடியும்.

ஜியோ ரூ 399 பிளான்: 

இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 3 ஜிபி தினசரி டேட்டா, ஜியோ சந்தா ஆகியவற்றைப் பெறலாம். சிறப்புச் சலுகையாக, ஜியோ ரூ.61 மதிப்புள்ள 6ஜிபி டேட்டா ஆட்-ஆன் வவுச்சரையும் இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நன்மைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

ஜியோ ரூ 999 பிளான்: இந்த பிளான் அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 3 ஜிபி தினசரி டேட்டா, 84 நாட்களுக்கு ஜியோ ஆப்ஸ் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது. 5ஜி சேவை விரும்புகிறவர்கள், பயனர்கள் ரூ.241 மதிப்புள்ள 40ஜிபி கூடுதல் டேட்டாவையும் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பெறலாம்.

முழுவீச்சில் Jio 5G சேவை விரிவாக்கம்.. சுமார் 1 லட்சம் 5ஜி டவர்கள் நிறுவல்!

ஜியோவின் புதிய கிரிக்கெட் டேட்டா ஆட்-ஆன் பிளான்கள்:

ஜியோ ரூ 222 டேட்டா பிளான்: இந்த டேட்டா ஆட்-ஆன் பிளானானது செயலில் உள்ள பிளான் வரை பயன்படுத்தலாம். இதில் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ஜியோ ரூ 444 டேட்டா பிளான்: இந்த பிளான் 60 நாட்களுக்கு 100 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இதில் பயனர்கள் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் 150 ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெறலாம்.

மை ஜியோ ஆப் அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பயனர்கள் இந்த ரீசார்ஜ் செய்யலாம்.
 

click me!