இப்படி ஒரு ரெட்மி போன் வந்துவிட்டதா? பரவாயில்லையே!

By Asianet TamilFirst Published Mar 27, 2023, 12:01 PM IST
Highlights

Redmi A2, Redmi A2+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள அம்சங்கள், நிறை குறைகளை இங்குக் காணலாம்.

ஷாவ்மி நிறுவனம் கடந்த ஆண்டு Redmi A1 மற்றும் A1+ என இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறைந்த விலையில் இருந்ததால், அந்த போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக A2 மற்றும் Redmi A2+ ஸ்மார்ட்போன்கள் வருகின்றன. இவை ஷாவ்மியின் அதிகாரப்பூர்வ உலகளாவிய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகலாம்.

இந்த போனில், 6.52″ HD+ LCD திரை உள்ளது. இதற்கு முன்பு Helio A22 குவாட் கோர் SoC பிராசசர் இருந்த நிலையில், தற்போது  ஆக்டா-கோர் ஹீலியோ G36 பிராசசருக்கு மாற்றப்பட்டுள்ளது. இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷனில் இயங்குகிறது. கேமராவைப் பொறுத்தவரையில், பின்புறத்தில் 8 எம்பி கேமரா, டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில் 5 எம்பி செல்பி கேமரா உள்ளது. 

போனை கையில் பிடிப்பதற்கு ஏதுவாக தோல் போன்ற டிசைனைக் கொண்டுள்ளது. 10W சார்ஜிங்கிற்கான வசதி, அதற்கு ஏற்ப 5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. A2 Plus போனில் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Redmi A2 மற்றும் A2+ சிறப்பம்சங்கள் சுருக்கம்:

  • திரை: 6.52-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) HD+ IPS LCD திரை
  • பிராசசர்: 2.2 GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 12nm பிராசசர், IMG PowerVR GE8320 @ 680MHz GPU
  • ரேம்: 2GB / 3GB LPDDR4X ரேம், 32GB eMMC 5.1 மெமரி, 1TB வரை விரிவாக்கக்கூடிய மெமரி கார்டு போடும் வசதி
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12 (கோ பதிப்பு)
  • சிம் வகை: டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
  • கேமரா: LED லைட் உடன் 8MP பின்பக்க கேமரா, 5MP முன் கேமரா
  • ஆடியோ: 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
  • சென்சார்: பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் (A2+ போனில் மட்டும்)
  • பரிமாணங்கள்: 164.9×76.75×9.09மிமீ;எடை: 192கிராம்
  • நெட்வொர்க்: டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 5.0, GPS + GLONASS, மைக்ரோ USB போர்ட்
  • பேட்டரி: 10W சார்ஜர், 5000mAh பேட்டரி

moto g32 ஸ்மார்ட்போனில் புதிய மாடல் அறிமுகம், விலையும் குறைவு!

Redmi A2 மற்றும் Redmi A2+ ஆகியவை வெளிர் நீலம், வெளிர் பச்சை மற்றும் கருப்பு வண்ணங்களில் வருகின்றன. ஷாவ்மியின் அதிகாரப்பூர்வ உலகளாவிய இணையதளத்தில் இந்த ஃபோன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!