மோட்டோரோலா நிறுவனம் கடந்தாண்டு மோட்டோ ஜி32 என்ற ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. அப்போது 4ஜிபி + 64ஜிபி என்ற வேரியண்ட் மட்டுமே அறிமுகப்படுத்தியது . இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மோட்டோரோலா நிறுவனம் கடந்தாண்டு மோட்டோ ஜி32 என்ற ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. அப்போது 4ஜிபி + 64ஜிபி என்ற வேரியண்ட் மட்டுமே அறிமுகப்படுத்தியது . இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
undefined
இதனையடுத்து தற்போது இந்தியாவில் புதிதாக மோட்டோ ஜி32 8 ஜிபி + 128 ஜிபி என்ற பதிப்பை மோட்டோரோலோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரேம் மற்றும் மெமரி மாற்றத்தைத் தவிர, ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை ஆகும்.
இதற்கு முந்தைய மாடலைப் போலவே இதுவும் ஆண்ட்ராய்டு 12 தளத்தில் இயங்குகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு 13 புதுப்பிப்பைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது ஆண்ட்ராய்டு 13 பெறும் என்பது குறித்த உத்தேச தேதி விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
moto g32 போனிலுள்ள சிறப்பம்சங்கள்:
திரை: 6.5-இன்ச் (2400×1080 பிக்சல்கள்) FHD+, LCD டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரெஷ் ரேட்
பிராசசர்: ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 6nm பிராசசர், Adreno 610 GPU
மெமரி: 8GB LPDDR4X RAM, 128GB மெமரி / 4GB LPDDR4X RAM, 64GB மெமரி
கூடுதல் மெமரி: மைக்ரோSD மூலம் 1TB வரை மெமரியை அதிகப்படுத்தலாம்
இயங்குதளம்: My UX உடன் Android 12
சிம் வகை: ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
கேமரா: 50MP பிரைமரி கேமரா, 8MP 118° அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, டெப்த் செயல்பாடு, 2MP மேக்ரோ கேமரா, LED ஃபிளாஷ், 16MP முன் கேமரா
ஆடியோ: 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், FM ரேடியோ
சென்சார்: பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
பாதுகாப்பு: ஸ்பிளாஸ் எதிர்ப்பு (IP52)
பரிமாணங்கள்: 161.78 x 73.84 x 8.49 மிமீ; எடை: 184 கிராம்
நெட்வொர்க்: டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS, USB டைப் -C
சார்ஜர்: 30W டர்போ சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி
விலை: மோட்டோ g32 8GB + 128GB பதிப்பானது சாடின் சில்வர், மினரல் கிரே வண்ணங்களில் வருகிறது. இதன் விலை ரூ. 11,999 ஆகும். இது இன்று மார்ச் 22ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. இதற்கு முந்தைய மாடல் அதாவது 4 ஜிபி + 64 ஜிபி மாடல் இப்போது ரூ.10,499 விலையில் கிடைக்கிறது.