மிகக்குறைந்த விலையில் Nokia ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Asianet Tamil  |  First Published Mar 21, 2023, 11:18 PM IST

நோக்கியா நிறுவனம் அண்மையில் நோக்கியா C12 என்ற குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிவித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது Nokia C12 Pro  என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 


எச்எம்டி குளோபல் நிறுவனம் அண்மையில் நோக்கியா சி12 என்ற ஆரம்ப நிலை ஸ்மார்ட்போனை அறிவித்தது. அதன் பிறகு, மற்றொரு புதிய பட்ஜெட் போனை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் - நோக்கியா சி12 ப்ரோ ஆகும். Nokia C12 Pro போனில் ஆக்டா கோர் பிராசசர், 2GB விர்ச்சுவல் ரேம் வசதி, விளம்பரமில்லாத இயங்குதளம், நைட்மோட் மற்றும் போர்ட்ரெய்ட் கேமரா என பல்வேறு அம்சங்கள் உள்ளன. மலிவு விலையில் பல பயனுள்ள அம்சங்களை வழங்குவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

விலை: 

Tap to resize

Latest Videos

2ஜிபி ரேம் + 2ஜிபி விர்ச்சுவல் ரேம், 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலின் ரூ.6,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 5ஜிபி ரேம் (3ஜிபி ரேம் + 2ஜிபி விர்ச்சுவல் ரேம் உட்பட) மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி போன் உள்ளது. அதன் விலை ரூ.7999 என்ற வகையில் வருகிறது.
மொத்தம் மூன்று வண்ண நிறங்களில் வருகிறது. அவை: லைட் மிண்ட், கோல், மற்றும் டார்க் சியான் ஆகும். வாடிக்கையாளர்கள் இதனை நோக்கியா ஷோ ரூம், ஆன்லைன் தளங்கள், Nokia.com ஆகியவற்றில் வாங்கிக்கொள்ளலாம்.

​நோக்கியா சி12 ப்ரோ  ஸ்மார்ட்போனிலுள்ள சிறப்பம்சங்கள்: 

​​நோக்கியா சி12 ப்ரோ 6.3 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 8 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பை கொண்டாதாகும், முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், Nokia C12 Pro ஆனது நைட்மோட் உள்ளிட்ட கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.

iQOO Z7 5G launched in India, limited period price starts at Rs 17499, check details here

இந்த புதிய நோக்கியா சி12 ப்ரோ பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, குறைந்தது இரண்டு வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அத்துடன் 12 மாத மாற்று உத்தரவாதத்துடன் வழங்குவதாகவும் உறுதியளிக்கிறது.

இந்தியாவில் ஒன்றன் பின் ஒன்றாக நோக்கியா போன்கள் அறிமுகமாகி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, நோக்கியா C12 ஸ்மார்ட்போன் வெளியானது. அதன் விலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ. 5,999 என்று இருந்தது. செல்ஃபி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், 6.3 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவ இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!