iQOO Z சீரிஸ் ஸ்மார்ட்போன்களான Z7 மற்றும் Z7x இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சம் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சாம்சங், ரெட்மிக்கு போட்டியாக ஐக்கூ தயாரிப்பும் வளர்ந்து வருகிறது. அண்மையில் ஐக்கூ தயாரிப்பில் வெளியான ஐக்கூ Z சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது அதே ஐக்கூ Z சீரிஸில் ஐக்கூ 7, Z7x என இரண்டு ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் நாளை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது.
6.64-இன்ச் FHD+ LCD திரை, 120Hz ரெப்ரெஷ் ரேட்,, 240Hz டச் சாம்பிளிங், 91.06% ஸ்கிரீன்-டு-பாடி-ரேஷியோ, 16MP முன் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஸ்னாப்டிராகன் 782G SoC பிராசசர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் போனின் செயல்திறன் சற்று மென்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவைப் பொறுத்தவரையில் 64எம்பி பின்புற கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது. போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. 120W வேகமான சார்ஜிங் வசதியும், அதற்கு ஏற்ப 5000mAh பேட்டரியும் கொண்டுள்ளது.