குறுகிய கால சலுகைகளுடன் iQOO Z7 5G இந்தியாவில் அறிமுகம்!

By Asianet TamilFirst Published Mar 21, 2023, 11:00 PM IST
Highlights

சீனாவில் iQOO Z7 5G மற்றும் iQOO Z7x 5G அறிமுகமான நிலையில், இந்தியாவிலும் iQOO Z7 5G அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இருப்பினும், iQOO Z7 5G இன் இந்தியப் பதிப்பு, மீடியாடெக் சிப்செட், AMOLED டிஸ்ப்ளே என சீனப் பதிப்பிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது.
 

iQOO Z7 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. iQOO Z7 5G என்பது பட்ஜெட் சலுகையாகும், மேலும் இதில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங், மீடியாடெக் டைமென்சிட்டி 920 பிராசசர், 90Hz ரெப்ரெஷ் ரேட், AMOLED பேனல், 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா என பல அம்சங்களை உள்ளடக்கியது. இந்த ஸ்மார்ட்போன் இன்று மதியம் 1 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வந்தது.

இந்தியாவில் iQOO Z7 5G விலை:

ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ.17499 என தொடங்குகிறது. மற்ற வகைகளும் கிடைக்கின்றன. மொத்தத்தில், iQOO Z7 5G இரண்டு வகைகளில் வருகிறது. அடிப்படை மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் மெமரி உள்ளது, இது ரூ.18999 விலையில் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய போனின் மாடல் ரூ.19,999 விலையில் வருகிறது.

iQOO Z7 5G சலுகைகள்:

அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, HDFC மற்றும் SBI கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும், ஆனால் இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். எனவே, நீங்கள் iQOO ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இதுவே சிறந்த நேரம். தள்ளுபடிக்குப் போக, 6ஜிபி மாடல் ரூ.17499க்கும், 8ஜிபி ரேம் மாடல் ரூ.18499க்கும் கிடைக்கும். அமேசான் மற்றும் iQOO சொந்த இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

iQOO Z7, iQOO Z7x அறிமுகம்.. சாம்சங்கை காலி செய்துவிடும் போலயே!

iQOO Z7 5G அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உள்ளது. ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 பிராசசர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளன. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான FunTouchOS 13 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸில் இயங்குகிறது.

கேமராவைப் பொறுத்தவரையில் iQOO Z7 5G போனில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா,  OIS தொழில்நுட்பம், 2 மெகாபிக்சல் கூடுதல் கேமராவைக் கொண்டுள்ளது. அதாவது டூயல் கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோவுக்காக 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.  மேலும், USB Type-C போர்ட், 44W வேகமாக சார்ஜ் செய்வதற்கான வசதி,. 4500mAh சக்தி  கொண்ட பேட்டரி  ஆகியவை உள்ளன. இந்தியாவில் இந்த  ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண நிறங்களில்  வருகிறது. அவை: பசிபிக் நைட் மற்றும் நார்வே ப்ளூ ஆகும். 

click me!