
ஜியோ வாடிகையாளர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! இனி 5G சேவையில் இப்படிப் பட்ட சலுகையா..?
தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் ஈர்க்க வைத்தது தான் ஜியோ
ப்ரீகால்ஸ் முதல் டேட்டா சேவை இலவசமாக வழங்குவதில் ஜியோவை மிஞ்ச வேறு எந்த நிறுவனமாவது வருமா என்றால் அது பெரிய சந்தேகமே...
இந்நிலையில், 5ஜி சேவையில் இறங்க தயாராகி விட்டது ஜியோ....
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராடிசிஸ் கார்ப்பரேஷன் டெலிகாம் சேவை மற்றும் உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கைப்பற்ற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தை 510 கோடி கொடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்க உள்ளது.
இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம், ஜியோ டெலிகாம் மட்டுமின்றி பெரிய தொழில் நுட்ப நிறுவனமாகவும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனி 5 ஜி சேவையை வழங்க முடியும் . அதுமட்டுமில்லாமல் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், ஓபன் சோர்ஸ் ஆர்கிடெட்ச்சர் இவை அனைத்தையும் பெற முடியும் என ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.