ஆபாச படம் பார்ப்பவரா? கூகுளின் எச்சரிக்கையைப் பாருங்கள்...

 |  First Published Jul 2, 2018, 11:47 AM IST
google sends you message when you watches more porn



கூகுள் இணையதளத்தில் தகவல்களைத் தேடுவோரின் அனுமதியில்லாமல் பாலியல் ஆபாசப் படங்கள் கொண்ட இணையதளங்கள் அடிக்கடி தோன்றுகின்றன. இது குறித்து இணையதள பயன்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கூகுள்
குரோம் பிளெசரில் ஹிஸ்ட்ரியில் பதிவு செய்யாமல் பார்க்கப்படும் புதிய வசதியான இன்காக்னிட்டோ என்ற வசதியை பயன்படுத்தி பலர் ஆபாச வீடியோவை பார்ப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

பர்சனல் கம்ப்யூட்டரில் இல்லாமல் பொதுவான கம்ப்யூட்டரில் நாம் பிரௌசிங் செய்யும்போது, இன்காக்னிட்டோ வசதியைப் பயன்படுத்தினால் தான் என்னென்ன பிரௌசிங் செய்தோம் என்பது ஹிஸ்டரியில் இருக்காது. இதனால், பிரௌசிங் செய்தவர் பாதுகாக்கப்படுவார்.

ஆனால், இந்த வசதியை பலர் ஆபாச வீடியோவை பார்க்க பயன்படுவதாக கூகுள் குரோம் கண்டறிந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் இன்காக்னிட்டோ
முறையில் ஆபாச வீடியோ பார்ப்பவர்களுடைய டிஸ்ப்ளேவில், ஸ்மைலி தோன்றி எச்சரிக்கும்.

மொபைல், டெக்ஸ்டாப், டேப்ளட், ஆண்ட்ராய்டு மொபைல் என அனைத்துக்கும் வித்தியாசமான முறையில் இந்த ஸ்மைலி தோன்றி எச்சரிக்கை செய்யும்.
அதனால், ஆபாச வீடியோவை அதிகம் பார்த்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மட்டும் யாரும் நினைத்துவிட வேண்டாம்.

click me!