itel A49 : ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் அசத்தல் ஸ்மார்ட்போன் அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Mar 15, 2022, 10:21 AM IST

ஐடெல் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 


ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய  ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஐடெல் A49  என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் HD+ வாட்டர் டிராப் டிஸ்ப்ளே, 4000mAh பேட்டரி, 5MP டூயல் கேமரா சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் ஐடெல் A49 மாடல் கிரேடியண்ட் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டு மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஓ.எஸ். மற்றஉம் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் SC9832E பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஐடெல் A49 அம்சங்கள்

- 6.6 இன்ச் HD+ 20:9 1600x720 பிக்சல் IPS LCD வாட்டர் டிராப் டிஸ்ப்ளே
- 1.4GHz குவாட் கோர் SC9832E பிராசஸர்
- மாலி 820MPi GPU
- 2GB ரேம்
- 32GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5MP பிரைமரி கேமரா, VGA AI கேமரா
- 5MP செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், GPS வசதி
- 4000mAh பேட்டரி

புதிய ஐடெல் A49 ஸ்மார்ட்போன் க்ரிஸ்டர் பர்பில், டோம் புளூ மற்றும் ஸ்கை சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விரைவில் அமேசான் தளத்தில் துவங்க இருக்கிறது.

click me!