அமேசான் அதிரடி - ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிப்பு

By Kevin KaarkiFirst Published Mar 14, 2022, 4:59 PM IST
Highlights

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் விலை அமேசான் இந்தியா வலைதளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது. 

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபோன் SE3 2022 மாடலை அறிமுகம் செய்தது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஐபோன் SE மாடலில் ஏராளமான புது அம்சங்கள், 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன் 13 மாடலின் விலை அமேசானில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐபோன் 13 பேஸ் மாடல் விலை ரூ. 53,100 என மாறி இருக்கிறது.

இந்தியாவில் ஐபோன் 13  பேஸ் மாடலான 128GB விலை ரூ. 79,900 என துவங்குகிறது. தற்போது அமேசான் தளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு ஆறு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 74,900 என மாறி இருக்கிறது. இதுதவிர மேலும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி எக்சேன்ஜ் சலுகையில் புதிய ஐபோன் 13 மாடலினை ரூ. 53,100 எனும் விலையில் வாங்கிட முடியும். 

வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து ஐபோன் 13 மீது ரூ. 15,800 வரை தள்ளுபடி பெற முடியும். அதன்படி ஐபோன் 13 விலை ரூ. 59,100 என மாறி விடும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் வங்கி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை சேர்க்கும் போது ஐபோன் 13 விலை ரூ. 53,100-க்கு கிடைக்கும். 

முன்னதாக ஐபோன் 11 மாடலுக்கும் இதேபோன்ற சலுகை அறிவிக்கப்பட்டது. அதில் ஐபோன் 11 மாடல் விலை ரூ. 35 ஆயிரத்திற்கே வழங்கப்பட்டது. ஐபோன் 11 இரண்டு ஆண்டுகள் பழைய மாடல் ஆகும். ஆனால் ஐபோன் 13 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புது மாடல் ஆகும். இதில் ஏ15 பயோனிக் சிப்செட், டூயல் கேமரா, சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

click me!