4 ஆண்டுகள் ஆகியும் அப்டேட் கிடைக்குது - மாஸ் காட்டும் சாம்சங்!

By Kevin Kaarki  |  First Published Mar 14, 2022, 4:25 PM IST

சாம்சங் நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி S9 ஃபிளாக்‌ஷிப் மாடல்களுக்கு தொடர்ந்து அப்டேட் வழங்கப்படுகிறது. 


ஸ்மார்ட்போன் சந்தையில் மாடல்களுக்கு நீண்ட காலம் அப்டேட் வழங்குவதில் சாம்சங் முன்னணியில் இருக்கிறது. எனினும், பயனர் எதிர்பார்ப்பையும் மீறி சாம்சங் தனது பழைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தொடர்ந்து அப்டேட் வழங்கி வருகிறது. சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ் மாடல்களுக்கு மார்ச் 22 செக்யூரிட்டி அப்டேட் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக 2019 மற்றும் அதன் பின் வெளியாகும் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், கேலக்ஸி S9 மாடல்கள் இன்றும் சாம்சங்கின் காலாண்டு செக்யூரிட்டி அப்டேட் பட்டிய லில் இடம்பெற்று உள்ளன. 

Latest Videos

undefined

கேலக்ஸி S9 சீரிஸ் மாடல்களுக்கான மார்ச் 2022 அப்டேட் G96xFXXUHFVB4 எனும் ஃபர்ம்வேர் வெர்ஷன் கொண்டிருக்கிறது. இந்த அப்டேட் 50-க்கும் அதிக செக்யூரிட்டி பிழைகளை சரி செய்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த அப்டேட் ஜெர்மனியில் வெளியிடப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த அப்டேட் உலகம் முழுக்க வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். 

மென்பொருள் அப்டேட் வழங்கும் விவகாரத்தில் சாம்சங்கின் இதுபோன்ற நடவடிக்கைகள் சந்தையில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. மேலும் நீண்ட கால சாம்சங் பயனர்களுக்கு இது பிராண்டு மீதான நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தும். இது மட்டுமின்றி புதிதாக சாம்சங் சாதனங்களை வாங்குவோருக்கு, சில ஆண்டுகளுக்கு இந்த சாதனத்தை நிச்சயம் பயன்படுத்தலாம் என நம்பிக்கை எழும்.

சாம்சங் கேலக்ஸி S9 அல்லது S9 பிளஸ் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 

click me!