ஹோண்டா நிறுவனம் தனது ஷைன் மோட்டார்சைக்கிளை வாங்குவோருக்கு அசத்தலான சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது பிரபல மோட்டார்சைக்கிள் மாடலான ஷைன் வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையின் கீழ் ரூ. 5,999 எனும் மிக குறைந்த முன்பணத்தில் ஹோண்டா ஷைன் வாங்க முடியும். மேலும் 5 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.
கேஷ்பேக் சலுகை தேர்வு செய்யப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் குறைந்த பட்சம் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு வழஙஅகப்படுகிறது. இத்துடன் ஹோண்டா ஜாய் கிளப் லாயல்டி சந்தா வாங்கும் போது ரூ. 5 லட்சம் மதிப்பிலான தனிநபர் காப்பீடு திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக ஹோண்டா ஷைன் இருக்கிறது. சமீபத்தில் இந்த மாடல் விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை எட்டியது. இது டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 74,600 மற்றும் ரூ. 77,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஹோண்டா ஷைன் மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.74 பி.ஹெச்.பி. திறன், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் மாடல் டி.வி.எஸ். ரைடர், ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இந்தியாவில் டி.வி.எஸ். ரைடர் மாடல் விலை ரூ. 82,953 என்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் டிரம் வேரியண்ட் விலை ரூ. 74,600 என்றும் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 77,600 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இந்த பிரிவில் ஷைன் மற்றும் சூப்பர் ஸ்பிலெண்டர் மாடல்களை விட டி.வி.எஸ். ரைடர் அதிக சக்திவாய்ந்த மாடலாக இருக்கிறது.