750 கிலோ எடை.. சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டை ஏவும் இஸ்ரோ | முழு விபரம்

By Raghupati R  |  First Published Apr 19, 2023, 2:16 PM IST

சிங்கப்பூரின் 750 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை பிஎஸ்எல்விசி - 55 ராக்கெட் மூலம் ஏப்ரல் 22 அன்று விண்ணில் செலுத்த உள்ளது இஸ்ரோ.


நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலை நிறுத்திவருகிறது. அதனுடன் வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.

Tap to resize

Latest Videos

அந்த வகையில் சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ் - 2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-55ராக்கெட் மூலம் ஏப்ரல் 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. 

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெலியோஸ் - 2 செயற்கைக்கோளானது புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே டெலியோஸ்-1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி - 29 ராக்கெட் மூலம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முடிவுகள் எப்போது ரிலீஸ் தெரியுமா? முழு விபரம்

இந்த நிலையில், இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிஎஸ்எல்வி சி - 55 ராக்கெட் மூலம் 750 கிலோ எடை கொண்ட டெலியோஸ் - 2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது என்று அறிவித்துள்ளது.

PSLV-C55/TeLEOS-02 Mission

The launch is scheduled
on 📆April 22, 2023, at 🕝14:19 Hrs IST.

The public can witness the launch from Launch View Gallery, Sriharikota, by registering through the link: https://t.co/J9jd8ymp2a

— ISRO (@isro)

இதையும் படிங்க..400 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்.. எங்கு, எப்போது காணலாம் - முழு விபரம்

click me!