வாட்ஸப் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாக மேசேஜ் வந்திருக்கிறா? அப்படியென்றால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.
ஆன்லைன் மூலம் நாளுக்கு நாள் புதிய புதிய மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சைபர் குற்றப் பிரிவு போலீசார் இதனால் பிசியாகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்கள் அதிக அளவில் வந்தபடி அரங்கேறி வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக பல கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸப் செயலியும் பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது வாட்ஸப் வேலைவாய்ப்பு மோசடி புதிய தலைவலியாக உருவாகியுள்ளது.
வேலைகளைத் தேடும் இளைஞர்கள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளனர். இரண்டு வருட கொரோனா தொற்று பின்னடைவுக்குப் பிறகு பொருளாதார நிலை மெல்ல மீண்டுவரும் நிலையில், பல இளைஞர்கள் வாய்ப்புகளுக்காக வெவ்வேறு வலைத்தளங்களைப் பார்க்கிறார்கள். அந்த வகையில் சாட்டிங் மூலம் பணி அமர்த்தலில் ஈடுபட்டுள்ள நிறுவனமான Hirect, அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்களைக் கூறுகிறது.
undefined
நாட்டில் வேலை தேடும் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 56 சதவீதம் பேர் வேலைதோடும்போது மோசடிகளால் பாதிக்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பேமெண்ட் செய்வது எப்படி?
வாட்ஸ்அப் மூலம் வேலைவாய்ப்பு
மோசடி செய்பவர்கள் இப்போது மக்களை ஏமாற்றுவதற்கு மிகவும் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஒரு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக உறுதி அளிப்பார்கள். கவர்ச்சிகரமானதாக இருப்பதற்காக பெரிய தொகையை தினசரி ஊதியமாகத் தருவதாகச் சொல்வார்கள்.
உதாரணம்: "Dear you have passed our interview, wage is Rs 8000/ day. Please contact discuss detail: wa.me/919165146378 SSBO."
மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்ற மெசேஜ் வெவ்வேறு எண்களில் இருந்து வரும். ஆனால் கிட்டத்தட்ட இதேபோன்ற தகவல்கள்தான் இருக்கும். பெரும்பாலும் இந்த மேசேஜ்களில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கிளிக் செய்தால் போதும், உங்கள் தனிப்பட்ட தரவுகளைத் திருடுவதற்கு வசதியாக வழி திறக்கப்பட்டுவிடும். சில நேரங்களில் யாராவது ஒருவர் தொடர்புகொண்டு, கூடுதல் விவரங்களைக் கேட்பார்கள். பதிவுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு கோருவார்கள்.
wa.me என்று தொடங்கும் லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்தால் வாட்ஸப் சாட்டிற்குள் செல்லும். மறுமுனையில் உள்ளவர் கூடுதல் விவரங்களைக் கேட்பார். எந்தக் காரணத்தைக் கொண்டு அவர் எதிர்பார்க்கும் பதிலைக் கொடுக்கக் கூடாது. இதேபோன்ற தந்திரம் கடந்த காலங்களில் பல முறை மோசடி பேர்வழிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே உஷாராக இதுபோன்ற மெசேஜ்களைத் தவிர்க்க வேண்டும்.
அப்பூப்பந்தாடி தெரியுமா? சுற்றுலா ஏஜென்சி தொடங்கி சாதித்த சஜ்னா
டெல்லி போலீஸ் எச்சரிக்கை
டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு ஆன்லைன் மோசடியிலிருந்து நம்மைப் பாதுகாக்க சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. "இளைஞர்கள் மற்றும் நன்கு படித்தவர்களை நோக்கி வேலைவாய்ப்பு என்ற பெயரில் சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் naukari.com. shine.com போன்ற வேலை தேடுவோருக்கான தளங்களில் இருந்து, மொபைல் எண், ஈமெயில் முகவரி, கல்வித் தகுதி, பணி அனுபவம் போன்ற விவரங்களைத் திருடுகிறார்கள். அவற்றை பயன்படுத்தி, புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உறுதி எனச் சொல்லும் போலியான தகவல்களை அனுப்புகிறார்கள்" என டெல்லி சைபர் க்ரைம் பிரிவு எச்சரிக்கிறது.
இந்த மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிசெய்யும் சில நடவடிக்கைகளையும் டெல்லி சைபர் க்ரைம் போலீசார் பட்டியலிட்டுள்ளனர்.
பல் பிடுங்கிய விவகாரத்தில் சூர்யா பிறழ் சாட்சி கூறியது ஏன்? தாத்தா பூதப்பாண்டி விளக்கம்
-- உண்மையாக வேலை வழங்குபவர்கள் வேலைவாய்ப்பு பதிவு, ஆவணச் சரிபார்ப்பு, நேர்காணல் போன்றவற்றுக்காக பெரிய தொகையைக் கோரமாட்டார்கள்.
-- மோசடி செய்பவர்கள் ஒரே மாதிரியான மின்னஞ்சல் கணக்குகள், லோகோக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி உண்மையான வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். எனவே வேலைவாய்ப்பு உதவிக்காக பணம் செலுத்துவதற்கு முன் அந்த நிறுவனத்தின் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
-- வேலை வழங்குவதாகக் கூறும் நிறுவனம் பற்றிய ஆன்லைனில் தேடித் தெரிந்துகொள்ளலாம். நிறுவனத்தின் மீதான புகார்கள், மதிப்புரைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். மதிப்புரைகளில் புகார்கள் அதிகமாக இருந்தால் அவர்கள் ஒருவேளை ஏமாற்றும் கும்பலாக இருக்கலாம்.
-- ஈமெயில், மொபைல் மூலம் வரும் தகவல்களை அப்படியே நம்பி ஏமாறக்கூடாது. ஒவ்வொரு தகவலையும் வேறு வழிகளில் சரிபார்ப்பது மோசடியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க உதவும்.
இனிமே இலவசம் கிடையாது.. ஐபிஎல் சீசனை காசு கொடுத்தா தான் பார்க்க முடியும் - முழு விபரம்