நிலவில் 40 மீட்டர் உயரம் சென்று 30-40 செ.மீட்டர் தூரத்தை கடந்த விக்ரம் லேண்டர்; வீடியோவுடன் இஸ்ரோ பதிவு!!

Published : Sep 04, 2023, 11:49 AM IST
நிலவில் 40 மீட்டர் உயரம் சென்று 30-40 செ.மீட்டர் தூரத்தை கடந்த விக்ரம் லேண்டர்; வீடியோவுடன் இஸ்ரோ பதிவு!!

சுருக்கம்

நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து இறங்கிய விக்ரம் லேண்டர் எதிர்பார்த்ததைப் போல் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் காலடி வைத்தது. அடுத்த சில மணி நேரங்களில் அதில் இருந்து ரோவரும் வெளியானது. நிலவில் சல்பர் இருப்பதை ரோவர் கண்டறிந்துள்ளது. 

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் எதிர்பர்த்ததைப் போல் நன்றாக இயங்கி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வீடியோ ஆதாரத்துடன் இந்த செய்தியை டிவிட்டரில் பதிவு செய்துள்ளது. இஸ்ரோ தனது பதிவில், ''ஹாப் பரிசோதனை அதாவது Hop experiment-ல் விக்ரம் லேண்டர் வெற்றி பெற்றுள்ளது என்றும், 40 மீட்டர் உயரத்திற்கு சென்று 30-40 செ.மீட்டர் தூரத்தை கடந்தது.

பரபரப்பாக வேலை செய்யும் பிரக்யான் ரோவர்! இறுதிக் கட்டத்தை நெருங்கும் சந்திரயான்-3 ஆய்வுப் பணிகள்!

இதன் முக்கியத்துமே எதிர்காலத்தில் நிலவில் இருந்து சாம்பிள்களை கொண்டு வருவதற்கு உதவும். மேலும், மனித விண்கலத்தை ஏவுவதற்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட அனைத்து சாதனங்களும் நன்றாக செயல்பட்டு வருகிறது. Ramp, ChaSTE, ILSA ஆகியவை நன்றாக செயல்பட்டு வருகின்றன'' என்று பதிவிட்டுள்ளது. 

நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திரயான் 3. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அனுப்பி இருந்த விண்கலம் நிலவின் வேறு பகுதிகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சவாலாக இருந்த தென் துருவத்தில் இஸ்ரோ விண்கலத்தை இறக்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்தப் பகுதி பல மில்லியன் ஆண்டுகளாக புதிராகவே இருந்து வருகிறது. மேலும், இங்கு ஐஸ் உறைந்து காணப்படுகிறது. பல கனிம வளங்கள் இருப்பதாகவும், நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இவற்றுக்கு எல்லாம் சந்திராயன் 3 விண்கலம் விடை அளித்துள்ளது. நிலவில் நில அதிர்வு இருப்பதை பிரக்யான் உறுதிபடுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவில் நில அதிர்வுகளை பதிவு செய்த சந்திரயான்-3! ILSA பதிவுகளை வரைபடத்துடன் விளக்கும் இஸ்ரோ!

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?