சத்தமில்லாமல் வசூல் வேட்டை நடத்தும் மெட்டா! பிசினஸ் உரையாடல்களை காசாக்கும் வாட்ஸ்அப்!

By SG BalanFirst Published Sep 3, 2023, 4:37 PM IST
Highlights

வாட்ஸ்அப்பின் ஆண்டு வருவாய் சுமார் 500 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான மிகவும் வெற்றிகரமான சேவைகளில் ஒன்று வாட்ஸ்அப். இருப்பினும், வாட்ஸ்அப் அந்த நிறுவனத்துக்கு வருமானம் ஈட்டிக்கொடுக்கும் வகையில் செயல்படவில்லை.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தாய் நிறுவனமான மெட்டா 2014 இல் 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ்அப் செயலியை செய்தமாக்கியது. இதற்கிடையில், 2012 இல் சுமார் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தையும் மெட்டா தன்வசப்படுத்தியது. அதில் இப்போது விளம்பரங்கள் மூலம் அபரிமிதமான வருவாயைச் சம்பாதித்து வருகிறது.

இந்நிலையில், இப்போது, வாட்ஸ்அப் செயலியிலும் லாபம் பார்ப்பதற்கான வழியை உருவாக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் மிக அதிகமான வாட்ஸ்பஅ் பயனர்கள் இருப்பதால், இந்த நாடுகளில் வாடிக்கையாளர்களுடனான வணிக உரையாடல்களை பணமாக்குவதன் மூலம் வருவாய் ஈட்ட திட்டம் போட்டிருக்கிறது மெட்டா.

ஒவ்வொரு உரையாடலுக்கும் 15 சென்ட் அல்லது சுமார் 40 பைசா கட்டணத்தை வணிக நிறுவனங்கள் மெட்டா நிறுவனத்துக்குச் செலுத்துவதாக நியூட்டன்-ரெக்ஸ் ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்படுகிறது. இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள வணிக நிறுவனங்களிடம் மெட்டா இந்த வசூலை நடத்திவருவதாகவும் நியூட்டன்-ரெக்ஸ் சொல்கிறது.

இனிமே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் ப்ரீ இல்லையா? வசூல் செய்ய புது வழியை உருவாக்கும் மெட்டா!

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் உபெர் (Uber) வாடகை வாகனப் பயணங்களை முன்பதிவு செய்யவும், நெட்பிளிக்ஸ் (Netflix) கணக்குகளில் திரைப்பட பரிந்துரைகளைப் பெறவும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். இப்படி அதிகமான வணிக உரையாடல்கள் நடப்பதால் வாட்ஸ்அப் அதை சாமர்த்தியமாக தனது வருவாய்க்கான வழியாக மாற்றி இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப் செயலியை 500 மில்லியன் பேர் தினமும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் வாட்ஸ்அப்பின் 90 உறுப்பினர்களைக் கொண்ட தயாரிப்புக் குழு, நிறுவனத்திற்கு வருவாயை அதிகரிக்க வர உதவும் அம்சங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழுவில் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் வில் கேத்கார்ட் ஆகியோர் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் நியூட்டன்-ரெக்ஸ் சொல்கிறது.

வாட்ஸ்அப்பின் ஆண்டு வருவாய் சுமார் 500 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் இந்த ஆண்டில் மெட்டா நிறுவனத்துக்கு 40 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போ ரூ.10,000 முதலீடு செய்திருத்தால் இப்ப நீங்கதான் கோடீஸ்வரன்! உதய் கொடாக் சொல்லும் கணக்கு என்ன?

click me!