IPHONE 12 MINI PRICE : ரூ. 26 ஆயிரத்திற்கு ஐபோன் 12 மினி - ப்ளிப்கார்ட் அதிரடி

By Kevin Kaarki  |  First Published Jan 28, 2022, 12:10 PM IST

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அவ்வளவு எளிதில் சலுகைகள் வழங்கப்படுவதில்லை. சமயங்களில் முன்னணி வலைதளங்களில் நடைபெறும்  சிறப்பு விற்பனையின் போது மட்டுமே ஐபோன்களுக்கு தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு விற்பனையில் ஐபோன் 12 மினி மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி மாடலை ரூ. 26 ஆயிரத்திற்கு வாங்கிட முடியும். ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் ஐபோன் வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இது சிறப்பான தருணம் ஆகும். ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன்  12 மினி 64GB மாடல் ரூ. 41,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது  ரூ. 15,850 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

விலை குறைப்பு மற்றும் எக்சேன்ஜ் சலுகை சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 12 மினி 64GB ரூ. 26,149-க்கு கிடைக்கிறது. முன்னதாக ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 59,900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு 29 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு விலை ரூ. 41,999 என மாற்றப்பட்டு, பின் எக்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவை இரண்டு சலுகைகள் தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் 5 சதவீத கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. எக்சேன்ஜ் சலுகையில் வாங்குவோர், முதலில் உங்களின் பகுதி அஞ்சல் குறியீட்டு எண் பதிவிட்டு உங்கள் பகுதிக்கு சலுகை உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.  

128GB ஐபோன் 12 மினி மாடல் 15 சதவீத தள்ளுபடி செய்யப்பட்டு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 54,999 விலையில் விற்பனை  செய்யப்படுகிறது. இத்துடன் 64GB மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் அனைத்தும் 128GB மாடலுக்கும் பொருந்தும். அந்த வகையில் இந்த மாடலுக்கும் எக்சேன்ஜ் சலுகையில் கூடுதலாக ரூ. 15,850 வரை தள்ளுபடி பெற முடியும். 

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 12 மினி மாடலில் 5.4 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் பிராசஸர், செராமிக் ஷீல்டு, 12MP+12MP பிரைமரி கேமரா சென்சார்கள், 12MP செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்பிலாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம், மேக்சேஃப் அக்சஸரீ சப்போர்ட், வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்கள் உள்ளன.

click me!