
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு CE 2 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் குறியீடுகளும் ஒன்பிளஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் சோதனைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது அறிமுகம் செய்யப்படலாம் ென்றும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ரெனோ 7 SE மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வேரியண்ட் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இணையத்தில் வெளியான ரெண்டர்களின் படி இரு மாடல்களின் கேமரா பம்ப் கிட்டத்தட்ட ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 2 மாடலில் 6.4 இன்ச் AMOELD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 900 5ஜி பிராசஸர், 8GB ரேம், 128GB / 256GB மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12 வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரி, 65வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி, 4ஜி எல்.டி.இ., டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், ஜி.பி.எஸ்., என்.எப்.சி., மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க இந்த மாடலில் 64Mஜ பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடலின் 6GB + 128GB விலை ரூ. 24 ஆயிரம், 8GB + 256GB ரூ. 28 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.