செல்பியில் மூழ்கியவர்கள் ஏராளம். என்னதான் மத்தவர்கள் நம்மை விதவிதமாக படம் எடுத்தாலும் செல்பி எடுப்பதில் இருக்கும் சந்தோஷமே தனி தான். ஆனால் அதற்கெல்லாம் இப்பொழுது போட்டிப்போடும் விதமாக வந்துள்ளது “ BOTHIE”
BOTHIE என்றால் என்ன ?
அதாவது கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிமுகமான நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் தான் இந்த புதிய தொழில்நுட்பம் BOTHE உள்ளது.
இதன் மூலம் ஒரே நேரத்தில் முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க கேமராவை பயன்படுத்த முடியும். இதற்கு முன்னதாக மற்ற மொபைல்களில் இரு கேமேராக்களையும் தனித்தனியாக தான் பயன்படுத்த முடியும். ஆனால் நோக்கியா 8ஸ்மார்ட்போனில் தான் இரண்டு கேமராக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
யூடியூப் மற்றம் பேஸ்புக் லைவ் வீடியோ
இந்த வசதி மூலம் இனி ஒரே ஒரு கிளிக் மூலமாக, நேரடியாக யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் லைவ் வீடியோ செய்யலாம். எனவே இனி வரும் காலங்களில் செல்பி எடுப்பது குறைந்து POTHIE அதிகளவில் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது