WhatsApp தொடர்ந்து, Instagram செயலியும் முடங்கியது! என்ன ஆச்சு Meta நிறுவனத்துக்கு?

By Dhanalakshmi GFirst Published Oct 28, 2022, 2:47 PM IST
Highlights

மெட்டா நிறுவனத்தின் கீழ் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் இயங்கி வருகின்றன. கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியன்று மதியம் 12 மணியளவில் வாட்ஸ்அப் செயலி முற்றிலுமாக முடங்கியது. சுமார் இரண்டு நேரத்திற்கு பிறகு சரிசெய்யப்பட்டது.

மெட்டா நிறுவனத்தின் கீழ் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் இயங்கி வருகின்றன. கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியன்று மதியம் 12 மணியளவில் வாட்ஸ்அப் செயலி முற்றிலுமாக முடங்கியது. சுமார் இரண்டு நேரத்திற்கு பிறகு சரிசெய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை இன்ஸ்டாகிராம் செயலியில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களுக்கு இன்ஸ்டாகிராம் வேலைசெய்யவில்லை என்று டுவிட்டர் தளத்தில் இன்ஸ்டாவை டேக் செய்து புகார் அளித்தனர். குறிப்பாக கூகுள் குரோம் பிரவுசர் மூலம் இன்ஸ்டாகிராமை திறப்பதில் தான் சிக்கல் ஏற்பட்டது., ன்ஸ்டாவின் முகப்பு பக்கத்தைகயோ, பயனர்களின் ஃப்ரோபைல் பக்கத்தையோ பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

Latest Videos

சாம்சங் ஸ்மார்ட்போனில் புதிதாக Maintenance Mode அறிமுகம்! இனி பயமின்றி இருக்கலாம்!!

இதுகுறித்து பயனர் ஒருவர் டுவிட்டர் தளத்தில் டுவீட் செய்திருந்தார். அதில் அவர், "இன்ஸ்டாகிராம் திடீரென வேலை செய்யாமல் போனது. நான் வலுக்கட்டாயமாக எல்லா செயலிகளையும் மூடிவிட்டு, RAM மெமரியை கூட அழித்து பார்த்தேன். மொபைலையே ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, ஆன் செய்து பார்த்தேன். எவ்வளவு முயன்றும் இன்ஸ்டாகிராமை ஓபன் செய்ய முடியவில்லை. அதன் பிறகு தான் தெரிந்தது, ஒட்டுமொத்தமாகவே எல்லா பயனர்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது." இவ்வாறு அந்த பயனர் கருத்து தெரிவித்தார்.

வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் அடுத்தடுத்து சிக்கல்கள் எழுந்ததால், பெரும்பாலான பயனர்கள் மற்ற சமூகவலைதளங்களை நோக்கி தேடத் தொடங்கினர். மெட்டா நிறுவனம் தரப்பில் சிக்கல் குறித்து விரிவான விளக்கம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இந்த பிளான் விரைவில் முடிகிறது!

click me!