டைப் ‘சி’ சார்ஜ் முறைக்கு மாறும் Apple நிறுவனம்!

By Dhanalakshmi G  |  First Published Oct 27, 2022, 9:13 PM IST

பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் அடுத்த ஆண்டு முதல் ஐபோனிற்கு USB-C வகை சார்ஜர்களை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது 2024 இல் அமலுக்கு வருகிறது.


ஐரோப்பியா நாட்டில் வெளியாகும் அனைத்து கேட்ஜட்டுகளும் டைப் சி போர்ட் சார்ஜரை பயன்படுத்த வேண்டும் என ஒரு சட்டத்தை ஐரோப்பியா அறிவித்திருந்தது. இந்த நிலையில், தி வால் ஸ்ட்ரீட் ஜேனல் ( The Wall Street Journal ) செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணல் ஒன்றில் ஆப்பிள்  நிர்வாகி கிரெக் ஜோஸ்வியாக் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘இனி வரும் காலங்களில் வெளியாக உள்ள அனைத்து ஐபோன்களும் USB-C போர்ட் சார்ஜருடன் லான்ச் செய்யப்படும்’ என்றார். 

ஐரோப்பியாவின் சட்டத்திற்கு இணங்க இவ்வாறு டைப் சி சார்ஜ் முறைக்கு ஆப்பிள் நிறுவனம் மாறியுள்ளதாக தெரிகிறது.  இதனால் இனி அனைத்து ஐபோன்களுக்கும் USB-C போர்ட் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், ஐபோன் 15 ஆனது USB-C போர்டுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

சாம்சங் ஸ்மார்ட்போனில் புதிதாக Maintenance Mode அறிமுகம்! இனி பயமின்றி இருக்கலாம்!!

இருப்பினும், இந்த USB-C சார்ஜ் முறையானது ஐரோப்பியாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா அல்லது இந்தியாவிற்கும் பொருந்துமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே Macs, iPadகள் மற்றும் பிற சாதனங்களை USB-C சார்ஜ் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இந்த பிளான் விரைவில் முடிகிறது!

click me!