பூமியைக் கண்காணிக்க ஆரம்பித்த இன்சாட் 3DS செயற்கைக் கோள்: இஸ்ரோ தகவல்

By SG Balan  |  First Published Mar 11, 2024, 10:00 PM IST

வானிலை ஆய்வு சேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் இஸ்ரோவின் INSAT-3D மற்றும் INSAT-3DR செயற்கைக் கோள்களுடன் இணைந்து செயல்படும்.


பூமியின் வானிலையை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இன்சாட் 3டிஎஸ் (INSAT 3DS) செயற்கைக்கோள் பூமியைக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கிவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் கடந்த மார்ச் 7ஆம் தேதி எடுக்கப்பட்ட பூமியின் படங்களை இஸ்ரோ வெளியிட்டது. பூமியில் மேற்பரப்பு வெப்பநிலை, மூடுபனி உள்ளிட்ட வானிலை தொடர்பான தரவுகளைப் பெறுவதற்காக இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

Tap to resize

Latest Videos

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 5.35 மணிக்கு, ஆந்திராவில் உள்ள ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து INSAT-3DS செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டள்ளது. மேம்படுத்தப்பட்ட வானிலை அவதானிப்புகள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளுக்கு பயன்படும் என்று இஸ்ரோ கூறியது.

CAA Explained: குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கு பயன்படும்? சாதக பாதங்கள் என்னென்ன?

INSAT-3DS Mission:
First glimpse of the beauty and complexity of Earth through modern Imager and Sounder payloads onboard INSAT-3DS.

This data serves as crucial input for Indian scientists for mereological studies, weather forecasts, and understanding atmospheric dynamics.… pic.twitter.com/XVF1JviKAW

— ISRO (@isro)

பேரழிவுகள் தொடர்பான  எச்சரிக்கைகளை வழங்குவதற்கு ஏதுவாக நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ளும் விதமாகவும் இந்த சாட்டிலைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு சேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் இஸ்ரோவின் INSAT-3D மற்றும் INSAT-3DR செயற்கைக் கோள்களுடன் இணைந்து செயல்படும்.

புவி அறிவியல் அமைச்சகத்தின் பல துறைகள் இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), மத்திய-தர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (NCMRWF), இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) ), இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) மற்றும் பிற நிறுவனங்கள் மற்றும் INSAT-3DS செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்தும்.

சிஏஏ பிளவுமிகு சட்டம்... மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

click me!