
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகமாகும் என சில தினங்களுக்கு முன் இணையத்தில் தகவல் வெளியாகி வந்தது. இதைத் தொடர்ந்து இன்ஃபினிக்ஸ் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கின. அந்த வரிசையில், புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி வெளியீட்டு தேதியை ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது.
அதன்படி இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுக நிகழ்வு மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றியும் தெரியவந்துள்ளது.
இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 900 சிப், அதிகபட்சமாக 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் கிடைக்கும் அதிவேகமான 5ஜி ஸ்மார்ட்போனாக புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. அறிமுக தேதி பற்றிய விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்ஃபினிக்ஸ் அதனை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி மாடலில் 48MP பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆரஞ்சு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.