Oppo : இந்தியாவின் முதல் IP69 ரேட்டிங் கொண்ட போன்? அறிமுகமாகும் Oppoவின் F27 சீரிஸ் - இணையத்தில் கசிந்த தகவல்!

By Ansgar R  |  First Published Jun 2, 2024, 5:14 PM IST

Oppo F27 Series : ஒப்போ எஃப் 27 சீரிஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவல் இப்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.


புதிதாக வெளியாகும் இந்த தொடரில் ஒப்போ எஃப்27, ஒப்போ எஃப்27 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்27 ப்ரோ+ ஆகிய மூன்று கைபேசிகள் அறிமுகமாகும் என்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Oppo F27 Pro தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 மதிப்பீட்டில் இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முகுல் ஷர்மா என்ற நபர் வெளியிட்ட ஒரு பதிவில், இந்தியாவில் Oppo F27 தொடரின் வெளியீட்டிற்கான போஸ்டரை பகிர்ந்துள்ளார். மேலும் ஒப்போ எஃப்27 ப்ரோ+ இந்தியாவில் ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்படும் என்ற தகவலும் அந்த போஸ்டரில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒப்போ எஃப்27 ப்ரோ மற்றும் நிலையான ஒப்போ எஃப்27 மாடலையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

என்னது 21 நாள் சார்ஜ் நிற்குமா? ஈ சிம் வசதியும் இருக்கு.. அறிமுகமான Vivo Watch GT - ஸ்பெக் மற்றும் விலை இதோ!

அதே போல முகுல் அளித்த தகவலின்படி, இந்தத் தொடரில் உள்ள ஸ்மார்ட்போன்களில் குறைந்தபட்சம் ஒரு போனிலாவது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.. இந்த மாதத்தின் பிற்பகுதியில் OPPO நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் போது, ​​இந்த கைபேசி குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கசிந்த போஸ்டரில் உள்ள ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு Oppo F27 Pro+ என்றும், அது கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு ஸ்மார்ட்போனான Oppo A3 Pro போன்ற தோற்றத்தில் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பின்புற பேனலின் மேல் பாதியின் நடுவில் அமைந்துள்ள வட்ட பின்புற கேமரா தொகுதி தெளிவாக தெரிகின்றது. 

OPPO F27 series coming to India on June 13th.
IP66,68,69 at least on the Pro+ 5G. pic.twitter.com/RqSevVHP2q

— Mukul Sharma (@stufflistings)

வடிவமைப்பைத் தவிர, சீனாவில் வெளியான Oppo A3 Pro ஆனது IP69 மதிப்பீட்டில் அறிமுகமான OPPOவின் முதல் தொலைபேசியாகும். அந்த A சீரிஸ் போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்த கைபேசி இந்தியாவில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், Oppo F27 Pro அல்லது F27 Pro+ ஆனது Oppo A3 Pro இன் உலகளாவிய மாறுபாடாக இருக்குமா என்பது குறித்த தகவல்கள் இப்பொது வரை வெளியாகவில்லை. 

வாட்ஸ்அப்பில் வரும் ஃபேவரேட்ஸ் அம்சம்! புதிய ஃபில்டர் ஆப்ஷனை எப்படி பயன்படுத்தலாம்?

click me!